×

தேர்தலில் போட்டியிடும் ஹர்திக் படேல் கனவு கலைந்தது: தண்டனையை நிறுத்த கோர்ட் மறுப்பு

கடந்த 2015ம் ஆண்டு குஜராத்தின் விஸ்நகரில் படேல் இனத்தவருக்கு இட ஒதுக்கீடு வழங்க கோரி போராட்டம் நடந்தது. படிதார் அனாமத் அன்டோலன் சமிதி இயக்க தலைவர் ஹர்திக் பட்டேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இது தொடர்பான வழக்கில் ஹர்திக் படேலுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கீழ் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஹர்திக் மேல்முறையீடு செய்தார். இதில், கீழ் நீதிமன்ற வழங்கிய தீர்ப்பை கடந்தாண்டு உயர் நீதிமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இந்நிலையில், கடந்த 12ம் தேதி ஹர்திக் படேல் காங்கிரசில் இணைந்தார். இந்த  மக்களவை தேர்தலில் ஜாம்நகர் தொகுதியில் போட்டியிடவும் அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவருக்கு  தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், தனது தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிடக் கோரி குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஹர்திக் மனு செய்தார். இதற்கு குஜராத் அரசு கடும் எதிர்ப்பு  தெரிவித்தது. இதையடுத்து, ஹர்திக் மனுவை உயர் நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. தேர்தல் விதிமுறைப்படி 2 ஆண்டு அல்லது அதற்கு மேல் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது. இதனால், மக்களவை தேர்தலில் போட்டியிடும் அவருடைய கனவு கலைந்துள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Haridk Patel ,election ,Court , Election, Harikhi Patel
× RELATED ஒப்புகைச் சீட்டுகளை பதிவான...