×

அந்த ஒரு சீட்டுக்காகவா தமாகாவுக்கு நாக்கு தள்ளியது? துணை தலைவர் கோவை தங்கம் நறுக்

1 காங்கிரசில் எப்படி இருந்த நீங்க... இப்போ ஒரு சீட்டுக்காக நாக்கு தள்ளும் அளவுக்கு தமாகா நிலைமை போய்விட்டதே?

எப்படி இருந்த காங்கிரஸ். இப்படி போய்விட்டது. காமராஜர், இந்திராகாந்தி, ராஜிவ் காந்தி, இருந்த காங்கிரஸ் போய், இன்று காங்கிரசில் இருந்து எல்லாரும் வெளியேறிய காங்கிரஸ் தான் உள்ளது. காங்கிரசுக்காக எங்களை விட தியாகம் பண்ணியவர்கள் யாரும் இல்லை. இந்திரகாந்தியை கைது செய்த போது ரயிலை கவிழ்க்க முயன்றேன் என்றெல்லாம் என் மீது வழக்கு போட்டார்கள். அன்று இருந்த காங்கிரஸ் இன்று இல்ல. அதனால் காங்கிரசை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை உருவானது. ஒரு நல்ல மனிதரை, 10 ஆண்டு மத்திய அமைச்சராக இருந்த ஜி.கே.வாசனை அரவணைக்க முடியாத காங்கிரஸ். மதிக்க தெரியாத காங்கிரசை நாங்கள் நேசிக்க தயாராக இல்லை.

2 நாடாளுமன்ற தேர்தலுக்கு அப்புறம் கட்சியை நடத்துவீங்களா?
உறுதியாக நடத்துவோம். நிச்சயமாக நடத்துவோம். எங்கள் லட்சியமே காமராஜர் ஆட்சியை அமைக்க வேண்டும் என்பதற்காக தான் தமாகாவை தொடங்கியுள்ளோம். நிச்சயம் ஒரு நாள் தமிழகத்தில் காமராஜர் ஆட்சியை ஜி.கே.வாசன் தலைமையில் அமைப்போம்.

3 தொண்டர்கள் ஒவ்வொருவராக வெளியேறி வருகிறார்களே?
தொண்டர்கள் என்பவர்கள் விசுவாசமிக்கவர்களாக இருக்க வேண்டும். தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ அந்த முடிவை ஏற்றுக் கொண்டு செயல்படு பவர்கள் தான் உண்மையான தொண்டர்கள். தலைவர் எடுத்த முடிவுக்கு மாற்று கருத்து உள்ளவர்கள் உண்மை தொண்டர்களாக இருக்க முடியாது.

4 காங்கிரசில் இருந்து பிரிந்து வந்து பாஜவுடன் கூட்டணி வைத்திருக்கிறீர்களே.. மக்கள் உங்களை நம்புவார்களா?
2001ல் ப.சிதம்பரம் பாஜவோட கூட்டணி வைத்திருந்தார். அவர் தான் பின்னாடி காங்கிரஸ் ஆட்சியில் மூத்த அமைச்சர். அகில இந்திய பாஜ செயலாளராகவும், பாஜ முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த திருநாவுக்கரசர் நேற்று வரை தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்தார். பாஜ ஆட்சியில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சராக இருந்தவர் வாழப்பாடி ராமமூர்த்தி. ஆக அரசியல் சூழ்நிலை, காலத்தின் கட்டாயம். வரலாற்றில் எல்லா கட்சிகளுமே பாஜவோடு கூட்டு வைத்து பல்வேறு பதவிகளை வகித்த இயக்கங்கள் தான் தமிழகத்தில் இன்று இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamana ,Vice President , Tamaka, Coimbatore Gold
× RELATED கே.எம்.சி.எச். மருத்துவமனையில்...