×

இன்று முதல் 16ம் தேதி வரை திமுக கூட்டணியை ஆதரித்து முத்தரசன் தேர்தல் பிரசாரம்

சென்னை,: மக்களவை பொதுத்தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்களில் பங்கேற்கும் திருத்தப்பட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்ட அறிக்கை: 30ம் தேதி (இன்று) தஞ்சாவூர் தொகுதி, 31ம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூர், 1ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், 2ம் தேதி மானாமதுரை, ராமநாதபுரம், 3ம் தேதி திருப்பூர், கோவை, 4ம் தேதி விளாத்திகுளம், எட்டையபுரம், கோவில்பட்டி, 5ம் தேதி சிவகாசி, வில்லிபுத்தூர், சத்திரப்பட்டி, சங்கரன் கோவில், 6ம் தேதி திருமங்கலம், மதுரை மேலூர், 7ம் தேதி போடி, ஆண்டிப்பட்டி, 8ம் தேதி திண்டுக்கல், கரூர், 9ம் தேதி நாமக்கல், ஈரோடு, 10ம் தேதி சேலம், ஆத்தூர், 11ம் தேதி தர்மபுரி, கிருஷ்ணகிரி, 12ம் தேதி திருப்பத்தூர், விழுப்புரம், 13ம் தேதி புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், 14ம் தேதி மயிலாடுதுறை, 15, 16ம் தேதி நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யவுள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : alliance ,DMK , Lok Sabha General Elections, Communist Party of India, Mutharasan
× RELATED தேர்தல் பணிகள் குறித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம்