×

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் சரவணபவன் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனை உறுதி

புதுடெல்லி: கொலை வழக்கில் சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு ஆயுள் தண்டனையை மீண்டும் உறுதி செய்து உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. நாகை மாவட்டம், வேதாரண்யத்தை சேர்ந்தவர் ஜீவஜோதி. இவரது கணவர் பிரின்ஸ் சாந்தகுமார். இவர், சென்னையை சேர்ந்தவர். இந்த நிலையில் ஜீவஜோதியை மறுமணம் செய்யும் நோக்கத்தில் சாந்தகுமாரை கொடைக்கானலுக்கு கடத்தி சென்று சரணவபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபால் கொலை செய்ததாக குற்றம் சாற்றப்பட்டது.வழக்கை விசாரித்த சென்னை பூந்தமல்லி நீதிமன்றம் ராஜகோபாலுக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.55 லட்சம் அபராதமும் விதித்தது. மேலும் கொலைக்கு உடந்தையாக இருந்த டேனியல், கார்மேகம், ஹூசைன், காசி விஸ்வநாதன், தமிழ்செல்வன், முருகானந்தம், சேது, பட்டுரங்கம் ஆகியோருக்கு 7முதல் 9 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்பட்டது.

ராஜகோபாலுக்கு வழங்கப்பட் 10 ஆண்டு தண்டனையை ஆயுளாக மாற்ற வேண்டும் என அரசு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பரிசீலனை செய்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா மற்றும் பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவில்,”கீழ் நீதிமன்றம் வழங்கிய 10 ஆண்டு சிறையை ஆயுள் தண்டனையாக அதிகரிப்பதாகதீர்ப்பு வழங்கியது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக ராஜகோபால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதில் வழக்கை பலகட்டங்களாக விசாரித்த நீதிமன்றம், கடந்த சில வாரங்களுக்கு முன்பு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.இந்நிலையில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் என்.வி.ரமணா மற்றும் சந்தான கவுடர் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு நேற்று அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது. அதில், “சரவணபவன் ஓட்டல் அதிபர் ராஜகோபாலுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை கண்டிப்பாக ரத்து செய்ய முடியாது. ஆதாரங்கள் வலுவாக உள்ளது. மேலும் வழக்கை தீர்க்கமாக விசாரித்த பின்னர்தான் உயர் நீதிமன்றம் ஒரு இறுதி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதனால் அதனையும் ரத்து செய்ய முடியாது. மேலும் வரும் ஜூலை 7ம் தேதிக்குள் ராஜகோபால் சென்னை நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Saravanapavan Rajagopal ,Sandhakumar ,Jeevozothy , Saravanapavan, Rajagopal, life imprisonment
× RELATED வெங்காய மூட்டைகளுடன் 1,426 ஆமைகள் கடத்தல்: 2 பேர் கைது