ஐபிஎல் 2019: சஞ்சு சாம்சன் சதம் விளாசல்; சன்ரைசர்ஸ் அணிக்கு 199 ரன்கள் வெற்றி இலக்கு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடைபெற்று வரும் சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி 198 ரன்கள் எடுத்துள்ளது. இரு அணிகளுமே வெற்றி கணக்கை துவக்க வேண்டிய கட்டாயத்தில் இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் காயத்தில் இருந்து குணமடைந்து இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளார். இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி நிர்ணயி்க்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியில் அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 55 பந்துகளில் 102 ரன்கள் எடுத்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 2019 ஐபிஎல் தொடரில் அடிக்கப்பட்ட முதல் சதம் இதுவாகும். இதனையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சன்ரைசரஸ் அணி களமிறங்க உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: