×

தலைமன்னார் - தனுஷ்கோடி இடையே பாக் ஜலசந்தி கடலில் நீந்தி தேனி சிறுவன் சாதனை

மண்டபம்: தேனி அல்லிநகரத்தை சேர்ந்த ரவிக்குமார் மகன் ஜெய் ஜஸ்வந்த் (10). 4ம் வகுப்பு மாணவர். இவர் தேனியில் கடந்த 2017ல் நடந்த மிக விரைவு மினி மாரத்தான் நீச்சல் போட்டியில், 4 கிமீ தூரத்தை 81 நிமிடங்களில் நீந்தி சாதனை நிகழ்த்தினார். தொடர்ந்து மாநில நீச்சல் போட்டிகளில் பங்கேற்று  பதக்கம் மற்றும் தனிநபர் சாம்பியன் கோப்பைகளை வென்றுள்ளார். கர்நாடகாவில் கடந்த பிப். 9 மற்றும் 10ம் தேதிகளில் நடந்த 11 வயதுக்குட்பட்டவருக்கான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று உலக சாம்பியன் போட்டிக்கு ஜெய் ஜஸ்வந்த் தகுதி பெற்றார்.

இந்நிலையில் இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி வரை பாக் ஜலசந்தி கடலில் நீந்தி சாதனை முயற்சியில் ஈடுபட்டார். இதற்காக நேற்று முன்தினம் ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஒரு விசைப்படகு மற்றும் 2 நாட்டுப்படகுகளில் 15 பேர் கொண்ட குழுவுடன் இலங்கை சென்றார். நேற்று அதிகாலை 2.30 மணியளவில் இலங்கை தலைமன்னார் கடலில் இருந்து நீந்த துவக்கிய ஜெய் ஜஸ்வந்த், 30 கி.மீ தூரத்தை 10.30 மணி நேரத்தில் நீந்தி தனுஷ்கோடிக்கு வந்து சேர்ந்தார். அவரை டிஜிபி சைலேந்திரபாபு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Palk Strait ,Talaimannar ,sea ,Dhanushkodi , Dhanushkodi, Pajjalasanthi sea, Theni, boy, record
× RELATED பாம்பன் கடலில் புதிய ரயில் பாலப்பணிகள் தீவிரம்