×

திருச்சி, மதுரை, தருமபுரி வேட்பாளர்கள் பலருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு : அமமுகவினர் அதிர்ச்சி

சென்னை : திருச்சி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கணேசனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குக்கர் சின்னத்தை சுயேச்சைகளுக்கு ஒதுக்க வேண்டாம் என தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது. அமமுகவுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துவிட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் பலருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் அமமுகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குக்கர் சின்னமும் தினகரனும்  


மக்களவைத் தேர்தலில் குக்கர் சின்னம் ஒதுக்கக் கோரி அம்மா மக்கள் முன்னேற்றக கழகத்தின் துணைப் பொது செயலாளர் டிடிவி தினகரன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில், டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்குமாறு உத்தரவிட உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் டிடிவி தினகரன் தலைமையிலான அணிக்கு பொது சின்னம் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி டிடிவி தினகரனின் அமமுகவுக்கு பொது சின்னமாக பரிசுப் பெட்டி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்துள்ளது.

சுயேட்சை வேட்பாளர்களுக்கு குக்கர் சின்னம் வேண்டாம்


இதையடுத்து வரும் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அமமுக வேட்பாளர்கள் அனைவரும் பரிசுப் பெட்டி சின்னத்தில் போட்டியிட உள்ளனர். இந்நிலையில் குக்கர் சின்னத்தை பல சுயேட்சை வேட்பாளர்கள் தங்களுக்கு ஒதுக்கும்படி கோரிக்கை விடுத்தனர். எனவே குக்கர் சின்னத்தால் குழப்பம் ஏற்படக்கூடாது என்பதற்காக குக்கர் சின்னத்தை சுயேட்சை வேட்பாளர்கள் யாருக்கும் ஒதுக்கக் கூடாது என தலைமை தேர்தல் அதிகாரியிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மேலும் குக்கர் சின்னத்தை வேறு யாருக்கும் ஒதுக்கக் கூடாது என்ற தினகரனும் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து பேசிய சத்யபிரதா சாஹூ, குக்கர் சின்னத்திற்கு சுயேட்சை வேட்பாளர்கள் யாரும் விண்ணப்பித்து உள்ளார்களா என்பதை பார்த்த பின்னர்தான் குக்கர் சின்னம் குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

வேட்பாளர்கள் பலருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு


*மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நிர்மலாதேவி வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

*திருச்சி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் கணேசனுக்கு பிரஷர் குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

*சாத்தூர் சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளருக்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.

*தருமபுரி தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் வெங்கடாசலத்திற்கு குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Many ,Tiruchy ,Dharmapuri ,Madurai ,agitator , Madurai, Nirmaladevi, attorney, cooker logo
× RELATED தண்ணீர் தேடி அலைந்தபோது குழியில்...