×

புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த நடிகை ஊர்மிளாவுக்கு வாய்ப்பு : நக்மா, குஷ்பு ஆகியோருக்கு வாய்ப்பில்லை

மும்பை : கடந்த புதன்கிழமை காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த பிரபல இந்தி நடிகை ஊர்மிளா மதோன்கர் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிடுவார் என்று அந்த கட்சி அறிவித்துள்ளது. மும்பை காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்தப்பட்டதை அடுத்து கட்சி தலைமை இந்த முடிவை எடுத்திருப்பதாக கட்சி தலைவர் Milind Deora கூறியுள்ளார். மும்பையில் உள்ள 5 நாடாளுமன்ற தொகுதிகளில் ஏற்கனவே 4 தொகுதிகளில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊர்மிளா வடக்கு தொகுதிக்கு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதே போன்று பாரதிய ஜனதா கட்சியின் அதிருப்தி தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜஸ்வந்த் சிங்கின் மகன் மன்வேந்தராவுக்கும் ராஜஸ்தானில் பார்மர் தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது. முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமார் பீகார் மாநிலம் சசாராம் தொகுதியில் மீண்டும் போட்டியிட உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் இதுவரை 293 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியில் ஏற்கனவே உள்ள நடிகைகள் நக்மா, குஷ்பு ஆகியோருக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : party ,Congress ,Khushboo ,Urmila , Congress, Urmila Matonkar, Mumbai, Jaswant Singh
× RELATED காங்கிரஸ் கட்சிக்கும், சீன...