×

தீவிரவாதிகள் நிதியுதவி பெறுவதை தடுக்க உலக நாடுகள் முன்வர வேண்டும் :ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தல்

வாஷிங்டன் : தீவிரவாதிகள் நிதியுதவி பெறுவதை தடுக்க உலக நாடுகள் முன்வரவேண்டும் என்று ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. தீர்மானத்தை வழிமொழிந்த ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் தீவிரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்கும் நாடுகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தானில் இருந்து எளிதில் நிதியுதவி பெறும் தீவிரவாதிகள், தொடர் குற்றச்செயலில் ஈடுப்பட்டுவருவதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று அக்பருதீன் கேட்டுக் கொண்டுள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், உலகின் பல்வேறு நாடுகளில் சட்டத்தில் திருத்தம் செய்து தீவிரவாதிகள் பணம்பரிமாற்றத்தை தடுப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

மேலும் தீவிரவாதிகள் பண பரிமாற்றத்தை கண்டுபிடிக்க சிறப்பு புலனாய்வு அமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் அக்பருதீன் வலியுறுத்தி உள்ளார். தேசிய முகமது தீவிரவாத இயக்கத் தலைவன் மசூத் அசாருக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளன. ஆனால் வழக்கம்போல் தீர்மானத்தை செயலிழக்கும் திட்டத்தில் சீனா இறங்கியுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : World countries ,terrorists ,Security Council ,UN , Terrorists, financing, UN Security Council, Syed Akbaruddin, Masood Asar
× RELATED ஐநா பாதுகாப்பு கவுன்சிலில்...