×

இந்தியாவில் 4ஜி சேவையில் பின்தங்கிய நிலையில் இருக்கும் முக்கிய நகரங்கள்: ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவிலேயே ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரத்தில் தான் 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது. லண்டனைச் சேர்ந்த ஓப்பன்சிக்னல் என்ற தனியார் நிறுவனம் இந்தியாவில் 4ஜி வசதி குறித்த ஆய்வை மேற்கொண்டது. அதில், இந்தியாவில் உள்ள 50 முக்கிய நகரங்களில் ஆய்வு மேற்கொண்டு அங்குள்ள 4ஜி வசதி குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவிலேயே ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத் எனும் நகரத்தில் தான் 95.3% 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இரண்டாம் இடத்தில 95% பெற்று ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியும், மூன்றம் இடத்தில் 94.9 % பெற்று ஸ்ரீநகரும் இடம் பெற்றுள்ளது. 94.8% பெற்று ராய்ப்பூர் நான்காம் இடத்திலும், பாட்னா அதற்கு அடுத்த இடத்திலும் உள்ளது.

ஓபன்சிக்கனல் நடத்திய இந்த ஆய்வு 4ஜி நெட்வொர்க்கின் பாதுகாப்பு அளவீடு அல்லது புவியியல் அளவீடு வைத்து கணக்கிடப்படவில்லை. மாறாக, 4ஜி சாதனங்களை உபயோகிக்கும் பயனாளர்களின் பயன்பாட்டு நேரத்தின் விகிதம் மற்றும் நெட்வொர்க் கிடைக்க பயன்படுத்தும் சந்தாவை உள்ளிட்டவை கணக்கில் கொண்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா ஆகியவை முதல் 10 இடங்களில் கூட இடம்பிடிக்கவில்லை. 4ஜி வசதியில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பின்னிலையிலேயே இருக்கின்றன. அதில் டெல்லி, மும்பை நகரங்களில் 90% மற்றும் 4ஜி வசதி உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பெங்களூரு, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்கள் 4ஜி வசதி 92% என கணக்கிடப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் 90.5% வசதி உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட நகரங்களில் 91% வசதியும் கோவையில் 92% வசதியும் கிடைக்கப்பெறுவதாக கணக்கிடப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தியாவின் முக்கிய நகரங்கள் எல்லாம் 87%க்கும் அதிகமான 4ஜி அளவை பெற்றுள்ளதாகவும், இந்தியாவை பொறுத்தவரை 4ஜி வசதி கொடுப்பதில் ஜியோ 96.7% பெற்று முதலிடத்தில் இருப்பதாகவும், இது மற்ற போட்டியாளர்களை விடவும் 20% வரை அதிகம் என்றும் ஆய்வில் தகவல் அளிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : cities ,India , 4G Avilability, India, Cities, Study
× RELATED தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெப்பநிலை...