×

நிசாமாபாத் தொகுதியில் 185 வேட்பாளர்கள் போட்டி : வாக்குச்சீட்டு முறையை கடைபிடிக்க தேர்தல் ஆணையம் முடிவு

ஹைதராபாத் : தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா களம் இறங்கியுள்ள நிசாமாபாத் தொகுதியில் 178 விவசாயிகள் உள்பட மொத்தம் 185 பேர் போட்டியிடுகின்றன. இதனால் அங்கு வாக்குசீட்டு முறையில் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தெலங்கானாவில் முதல் கட்டமாக ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தெலங்கானாவில் மஞ்சள் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவில்லை வழங்காததால் அதிருப்தி அடைந்த விவசாயிகள் 1000 பேர் அம்மாநில முதல்வர் சந்திர சேகரராவின் மகள் கவிதா போட்டியிடும் நிசாமாபாத் தொகுதியில் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

இதில் 178 விவசாயிகள் உள்பட 185 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. அதனால் நிசாமாபாத் தொகுதியில் மட்டும் வாக்குசீட்டு முறையில் வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் 63 வேட்பாளர்கள் மற்றும் கூடுதலாக நோட்டா மட்டுமே இடம்பெற முடியும் என்பதால் வாக்குசீட்டுக்கு ஏற்பாடு செய்ய உள்ளதாக அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரி ரஜித் குமார் தெரிவித்துள்ளார். இதற்கு முன் கடந்த 1996ம் ஆண்டு நல்கொண்டாவில் 480 வேட்பாளர்களும், பெல்காமில் 456 வேட்பாளர்களும் போட்டியிட்டனர். இதனைத் தொடர்ந்து 2010ம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள வாரங்கல் இடைத் தேர்தலில் 64 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நிசாமாபாத் தொகுதியில் 185 வேட்பாளர்கள் என்பதால் வாக்குசீட்டு புத்தக வடிவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency ,Nizamabad ,Election Commission , Nizamabad, constituency, candidates, Telangana, farmers, Election Commission
× RELATED எனது வீட்டில்கூட சிசிடிவி...