×

காங்கிரஸ் சார்பில் தமிழகம் முழுவதும் ஜி.கே.தாஸ், கோபி, விஎஸ்ஜே தினகர் உட்பட பலர் காங்கிரஸ் பொறுப்பாளர்களாக நியமனம்

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில், நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பொறுப்பாளர்கள் ஜி.கே.தாஸ், கோபி, வி.எஸ்.ஜெ.தினகர் உள்பட பலர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக காங்கிரஸ் கட்சியின் சார்பில், நாடாளுமன்ற தொகுதி வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுகிறார்கள். திருவள்ளூர்-பி.தாமோதரன், எம்.பி.ரஞ்சன் குமார், வடசென்னை- டி.எல். சதாசிவலிங்கம், வி.எஸ்.ஜே.தினகரன், தென்சென்னை - ஆர்.தாமோதரன், இல. பாஸ்கரன், தி.நகர் ஸ்ரீராம், மத்திய சென்னை-ஜி.கே.தாஸ், எம்.எம்.டி.ஏ. கோபி, ஸ்ரீபெரும்புதூர்-நாசே ஆர்.ராஜேஷ், ஆர்.எஸ்.செந்தில்குமார், ஜெ.பாலமுருகன், காஞ்சிபுரம்- ஐ.கேசவபெருமாள், அளவூர் நாகராஜன், அரக்கோணம் - அருள்அன்பரசு, அண்ணாதுரை,
வேலூர்-ஜி.கே.மோகன், சி.ஏ.முரளி, கிருஷ்ணகிரி -கே.பாலசுப்ரமணியன், எல்.முத்துகுமார், தர்மபுரி -கே.பாலகிருஷ்ணன், பாடி வி.நாகராஜன், திருவண்ணாமலை - பி.எஸ்.விஜயகுமார், எம்.வசந்தராஜ், ஆரணி-கே.விஜயன், ஆறுமுகம், விழுப்புரம் - குலாம் மொய்தீன்,

சிவா, கள்ளக்குறிச்சி- எஸ்.கே.செல்வராஜ், சங்கராபுரம் சீனிவாசன், என்.தனபால், சேலம்-எடப்பாடி கோபால், எஸ்.டி. பன்னீர்செல்வம், நாமக்கல்-ஆர்.செழியன், எம்.ஆர்.சுந்தரம் பி.ஏ.சித்திக், ஈரோடு-பி.என்.நல்லுசாமி, கே.எம்.பாலசுப்ரமணியன், திருப்பூர்-அவினாசி வெங்கடாசலம், டி.டி.கே.சித்திக், நீலகிரி - கே.சந்திரமோகன், கோஷி பேபி, கோயம்புத்தூர் - ஆர்.ராதாகிருஷ்ணன், வீனஸ் மணி, பி.எஸ்.சரவணகுமார், பொள்ளாச்சி - டி.கோவிந்தராஜன், ஆர்.வேலுமணி, திண்டுக்கல்-முகமது சித்திக், ஒட்டன்சத்திரம் கிருஷ்ணன், கரூர் - கே.எஸ்.மகேஷ்குமார், என்.ஜெயபிரகாஷ், திருச்சி-அரிமளம் சுந்தர்ராஜன், பென்னட் அந்தோணிராஜ், பெரம்பலூர்- ஜெ.லோகாம்பாள்
தொட்டியம் சரவணன், கடலூர்-கே.ஐ.மணிரத்தினம், பாபு சத்தியமூர்த்தி, சிதம்பரம் - என்.வி.செந்தில்நாதன், பி.பி.கே.சித்தார்த்தன், மயிலாடுதுறை- கிருஷ்ணமூர்த்தி, பண்ணை சொக்கலிங்கம், நாகப்பட்டினம் -மன்னை மதியழகன், ஆர்.என். அமிர்தராஜ், தஞ்சாவூர் -ஆர்.சிங்காரம், பட்டுக்கோட்டை என்.ராஜேந்திரன், சிவகங்கை - எம்.என்.கந்தசாமி, ஆர்.எம்.பழனிசாமி,

மதுரை-சி.ஆர்.சுந்தர்ராஜன், ரவிச்சந்திரன், தேனி - எம்.ஜோதி, எல்.முருகேசன், விருதுநகர்-கே.சிரஞ்சீவி, டி.ஏ.நவீன், ராமநாதபுரம்- கே.ஓ.ஆர். செந்தாமரைகண்ணன், செல்லதுரை அப்துல்லா, தூத்துக்குடி - ஏ.பி.சி.வி.சண்முகம், சிவசுப்ரமணியம், தென்காசி-பி.வேல்துரை, ஆலங்குளம் செல்வராஜ், ராஜலிங்கராஜா, திருநெல்வேலி-தமிழ்செல்வன், எஸ்.டி.ராஜேஷ், எஸ்.ஆர்.எம். குமரேஷ், கன்னியாகுமரி-மயூரா எஸ்.ஜெயக்குமார்-எஸ்.கே.டி.பி. காமராஜ்.
அதேபோல், ஒவ்வொரு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் தலைமையில் தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டு கட்சி மாவட்ட அளவில் தேர்தல் பணிகளில் ஈடுபடுவார்கள். நாடாளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியுடன் இணைந்து தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Congress ,Gopi ,VSJ Dinakar ,GK Das , GK Das, Gopi, VSJ Dinakar, Congress
× RELATED ரூ.1,700 கோடி அபராதம் செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்