×

லாலு குடும்பத்தில் குழப்பம் இளைஞரணியில் இருந்து விலகினார் தேஜ்பிரதாப்

பாட்னா:  ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ், அக்கட்சியின் இளைஞர் அணி ஆலோசகர் பதவியை ராஜினாமா செய்தார். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ்பிரதாப் யாதவ். இவர் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியில் இளைஞர் அணி ஆலோசகராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் தேஜ் பிரதாப் தனது டிவிட்டர் பக்கத்தில், “நான் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் இளைஞர் அணி பதவியை ராஜினாமா செய்கிறேன். நான் ஒன்றும் அறியாதவன் என்று நினைப்பவர்கள் தான் எதுவுமே அறியாதவர்கள். யார்   மதிப்பு வாய்ந்தவர், எதனால் என்பது எனக்கு தெரியும்” என்று பதிவிட்டுள்ளார்.  லாலுவின் மகன்கள் தேஜ் பிரதாப் மற்றும் தேஜஸ்வி இடையே கடுமையான போட்டி நிலவி வந்த நிலையில் தேஜஸ்வி யாதவ் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவரின் அரசியல் வாரிசாக அறிவிக்கப்பட்டுள்ளார். சகோதரர்களுக்கு இடையேயான மோதல் வெடித்துள்ளது கட்சிக்குள் சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Lalu , Lalu, Yudanarani, Tejprada
× RELATED லாலு உதவியாளரின் இடங்களில் ED சோதனை!!