×

சீன ராணுவத்துக்கு உதவ மாட்டோம் டிரம்பிடம் கூகுள் உறுதி

வாஷிங்டன்: ‘சீன ராணுவத்துக்கு உதவ மாட்டோம்’ என அமெரிக்க அதிபரிடம் கூகுள் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் கூகுள் இணையதள நிறுவனத்தை குற்றம்சாட்டி டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். அதில் கூகுள் நிறுவனம் சீனா ராணுவத்துடன் இணைந்து செயல்படுவதாகவும், அமெரிக்கா பாதுகாப்புத் துறையுடன் இணைந்து பணியாற்ற மறுப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கூகுள் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரியும் இந்திய அமெரிக்கருமான சுந்தர் பிச்சை, நேற்று வாஷிங்டனில் உள்ள அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் அதிபர் டிரம்ப்பை சந்தித்து பேசினார். பின்னர், டிரம்ப் அளித்த பேட்டியில், ‘‘கூகுள் நிறுவனம் அமெரிக்க ராணுவத்துடன் இணைந்து பணியாற்ற ஒத்துழைப்பு தரும், சீன ராணுவத்துக்கு ஒத்துழைப்பு தராது என்று சுந்தர் பிச்சை  உறுதியளித்தார். இந்த சந்திப்பின்போது தேர்தல் நியதி உட்பட பல்வேறு அம்சங்களில் கூகுள் நமது நாட்டுக்கு செய்ய வேண்டிய பணி குறித்தும் விவாதிக்கப்பட்டது’’ என்றார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Google ,army ,Chinese , We will not help the Chinese army Google is committed
× RELATED ஈரான் அனுப்பிய 300 டிரோன்களை வழிமறித்து...