×

அத்வானி, ஜோஷி வழியில் வாய்ப்பை இழந்த சுமித்ரா

மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மக்களவை தொகுதி மிகவும் பிரபலம். காரணம், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜனின் தொகுதி இது. இவர் பெரிய சாதனைக்கு சொந்தக்காரர். நாட்டிலேயே இதுவரை எந்த பெண்ணும், ஒரே தொகுதியில் தொடர்ந்து 8 முறை போட்டியிட்டு வெற்றி பெற்றது கிடையாது. ஆனால், இந்த தொகுதியில் சுமித்ரா அதை செய்து சாதித்துள்ளார். அப்படிப்பட்டவருக்கு இம்முறை இங்கு மட்டுமல்ல; எங்குமே போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை பாஜ மேலிடம்.

காரணம், அவருக்கு இப்போது வயது 72. இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என பாஜ.வின் கொள்கையில், அத்வானி, ஜோஷியை போன்றவர்களை போல் இவரும் அதற்கு இரையாகி விட்டார். மேலும், உள்ளூரில் இவரை கவிழ்க்க சதி வேலை நடக்கிறது. ‘எங்கள எல்லாம் இவர் மதிக்கிறதே இல்ல. கட்சிக்காரங்கள விட்டு ரொம்பவே விலகி போறார். அதனால், அவரை இந்தூர் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தக் கூடாது‘ என அம்மாநில பாஜ நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே நேரம், இந்த தொகுதியில் மோடி போட்டியிட வேண்டும் என்று பாஜ தேர்தல் கமிட்டிக்கு தொகுதி பாஜ நிர்வாகிகள் கடிதம் அனுப்பியுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Advani ,Joshi ,Sumitra , Advani,Joshi, Sumitra,
× RELATED வீட்டில் இருந்தபடி வாக்களித்த மன்மோகன் சிங், அத்வானி