×

மோடியால்தான் வெற்றி..... பாஜ சிறுபான்மையினர் அணி தேசிய துணை தலைவர் பேகம்

ஒரு அரசை அந்த நாட்டில் உள்ள மக்கள் எப்போது நம்புவார்கள் என்றால், நமது நாடு முன்னேற்ற பாதையில் இருக்கிறது. நாம் முன்னேறி இருக்கிறோம். அடுத்த நாட்டுக்கு நாம் பயந்தவர்கள் அல்ல. அப்படி ஒரு நம்பிக்கையில் தான் ஒரு அரசை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். நமது அரசு கட்டமைப்பிலும், விஞ்ஞானத்திலும் ரொம்ப முன்னேறி இருக்கிறது. பொக்ரான் அணுகுண்டு சோதனை வாஜ்பாய் அரசின் சாதனை. அந்த சாதனையை நிகழ்த்திய பின்னர் தான் உலக நாடுகளுக்கு இந்தியாவின் அருமை தெரியவந்தது. அதே மாதிரி சர்ஜிகல் ஸ்டிரைக் பிரதமர் மோடியின் சாதனை. இது எல்லாம் ஒரு நாட்டின் பெருமை. தற்போதைய சாதனையை பொறுத்தவரை ரஷ்யா 3 முறை முயற்சி செய்தது. 6 முறை அமெரிக்க முயற்சி செய்தது. ஆனால் அவர்கள் அதற்கு பிறகு தான் வெற்றி பெற்றனர். ஆனால் பிரதமர் மோடி அரசாங்கத்தில் நமது முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளோம்.

வெறும் சாதனைக்காக வெற்றி வராது. அந்த சாதனை எப்போது வரும் என்றால் ஒரு நிலையான அரசு இருக்கும் போது தான் சாதனையை நிகழ்த்த முடியும். மற்ற அரசாங்கம் இருக்கும் போது இதை பற்றி யோசிக்கவே இல்லை. விஞ்ஞானிகளுக்கு மோடி அரசு கொடுத்த ஊக்கத்தால் சாத்திமாயிற்று. ஒரு வேலைக்காரனிடம் ஒரு வேலையை சொன்னால், செய்யலாம் என்று அப்படியே சென்றுவிடுவான். ஆனால் அவனது முதலாளி குறியாக இருந்து அவனுக்கு ஊக்கம் கொடுத்து செய்ய சொன்னால் தான் வேலை நடக்கும். விஞ்ஞானிகள், இளைஞர்களுக்கு மோடி அரசு பக்கபலமாக இருக்கிறது. அதனால் கட்டாயமாக படித்த மக்கள், இளைஞர்கள், முதல் ஓட்டு போடுபவர்கள் என அனைவரும் இந்த சாதனையை மனதில் வைத்து நமது நாடு முன்னேறுகிறது என்ற சந்தோஷத்தில் இது கட்டாயமாக ஓட்டாக மாறும். இவ்வாறு அவர் கூறினார்.

தேர்தல் நேர பப்ளிசிட்டி..... மகிளா காங்கிரஸ் தேசிய
பொதுச் செயலாளர் அப்சரா ரெட்டி:

பிரதமர் மோடிக்கு பெஸ்ட் ஆக்டர் அவார்டு தான் கொடுக்கனும். சிறந்த நடிகர் தான் என்று அவரை சொல்ல வேண்டும். யாரையும் அவர் முன்னிறுத்துவதில்லை. விண்வெளி பற்றியோ, ராணுவம் பற்றியோ எல்லாத்துக்குமே மோடி மட்டுமே நேரடியாக அறிவிக்கிறார். வறுமை பற்றியோ அல்லது வறுமையில் வாடுபவர்களை எப்படி வாழ வைக்க வேண்டும் என்பது பற்றியோ, பெட்ரோல் டீசல் விலையை எப்படி குறைக்கணும், பேரூந்து, ரயில் கட்டணங்களை எப்படி குறைக்கணும், பெண்களை எப்படி பாதுகாக்க வேண்டும் என்பது பற்றியெல்லாம் இவர் பேசுவதில்லை. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டு மக்கள் எவ்வளவோ பிரச்னைகளை சந்தித்திருக்கிறார்கள். அதுபற்றி எல்லாம் மோடி பேசுவதில்லை. இதுக்கு எல்லாம் தீர்வு காண முடியாமல் பப்ளிசிட்டி ஸ்டண்டுக்காக டிராமா பண்ணிட்டு விஞ்ஞானிகளோடு அரிய சாதனையை அவர்களை முன்னிறுத்தி சொல்லாமல், ஏதோ இவரே கண்டுபுடுச்ச மாதிரி அந்த சாதனைக்கு தான் தான் காரணம் என்பது போன்ற ஒரு மாயையை ஏற்படுத்த முயன்றுள்ளார்.

தமிழகத்துக்கு எந்த ஒரு பிரச்னை வந்தாலும் அது மோடியால் தான் வந்திருக்கிறது. தமிழக அரசை அடிமையாக வைத்து கொண்டு ஆட்சி நடத்துவதால் தான் தமிழகமே இந்த நிலைக்கு வந்துவிட்டது. இதுபற்றி எல்லாம் மோடி என்றைக்காவது ஒரு நாள் பேசியிருக்காரா? ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுககு கஷ்டபடுற விவசாயிகள் இருக்கிறார்கள். விவசாய கடன் தள்ளுபடி பற்றி எல்லாம் இப்படி அவசர அறிவிப்பு வெளியிட்டு தள்ளுபடி செய்திருக்கிறாரா? இப்படி பல பல பிரச்னைகள் இருக்கும் போது தேர்தல் நேரத்தில் இப்படி ஏதாவது பரபரப்பை ஏற்படுத்தி வெற்றி பெறலாம் என்று மோடி தப்பு கணக்கு போடுகிறார். விண்வெளியில் செயற்கை கோளை சுட்டு தள்ளும் சாதனை என்பது முழுக்க முழுக்க நமது விஞ்ஞானிகளின் சாதனைகளின் ஒரு மைல் கல். அதை ஓட்டாக மாற்ற மோடி முயற்சித்திருப்பது கண்டனத்துக்குரியது. இது ஓட்டாக மாறும் என்பதற்கான வாய்ப்புகள் துளி அளவு கூட இருக்க வாய்ப்பில்லை. மோடி- அமித்ஷா ஜோடியை வீட்டுக்கு அனுப்பும் நேரம் வந்துவிட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Modi ,victory ,vice president ,Bajaj Minor Team , Modi, Begum
× RELATED பாஜக மாநில துணைத் தலைவராக உள்ள சசிகலா...