×

சொந்த காசில் சூனியம் வைக்க வேண்டாம்..... அதிமுக வேட்பாளருக்கு வாட்ஸ் அப்அட்வைஸ்

திருப்பூர் மாவட்டம் காங்கயம் தொகுதி எம்.எல்.ஏ. வாக இருப்பவர் தனியரசு. தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை என தனிகட்சி நடத்தி வரும் இவர், கடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதாவிடம் சீட்டு பெற்று அதிமுக கூட்டணியில் இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்றவர். தற்போது அதிமுக, பாஜக வுடன் கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிடுகிறது. ஆனால் அதிமுக கூட்டணியில் உள்ள தனியரசு கட்சி, பாஜக போட்டியிடும் தொகுதியில் பிரசாரம் ஏதும் செய்ய போவதில்லை, அதிமுக போட்டியிடும் தொகுதியில் மட்டும் பிரசாரம் செய்யும் என அறிவித்தார்.

இதையடுத்து காங்கயம் தொகுதி எம்.எல்.ஏ தனியரசு பெயரை குறிப்பிட்டு வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்களில், ஈரோடு தொகுதி அதிமுக வேட்பாளர் வெங்குமணிமாறன் வாக்கு சேகரிக்கும் இடங்களுக்கு காங்கயம் எம்.எல்.ஏ தனியரசுவை உடன் அழைத்துச் செல்வது, சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமமாகும். தனியரசுவை தவிர்த்து விட்டு செல்வதே நலம் என ஆடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவி வருகிறது. இதனால் அதிமுக நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Watts UpAvice ,candidate ,AIADMK , Whatsapp, AIADMK candidate
× RELATED கியூட், நெட் தேர்வுகளுக்கான மதிப்பெண்களை சமப்படுத்தும் முறை நீக்கம்