×

பெண்கள் டி20: இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து

கொழும்பு: ஒரு நாள் போட்டி தொடரரை  போன்றே டி20 கிரிக்கெட் தொடரிலும் எல்லாப் போட்டிகளிலும் வென்று இங்கிலாந்து பெண்கள் அணி இலங்கையை ஒயிட்வாஷ் செய்தது. இலங்கை - இங்கிலாந்து இடையே ஒரு நாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடைப்பெற்றது. ஒருநாள் போட்டித் தொடரை 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்து பெண்கள் அணி கைப்பற்றியது. தொடர்ந்து நடைப்பெற்ற டி20 போட்டியிலும் 2-0 என்ற கணக்கில் இங்கிலாந்து தொடரை கைப்பற்றி இருந்தது. இந்நிலையில் கடைசி டி20 போட்டி நேற்று கொழும்புவில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. கடந்த போட்டிகளை போன்றே இந்த போட்டியிலும் இங்கிலாந்து அபராக விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களான  டேனியலி வியாட் 51(33 பந்துகள்) ரன்களும், ஆமி ஜோன்ஸ் 58(38) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த டம்மி பிமவுண்ட் 42(25),  நடாலியா 49(24) ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அதனால் இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது. இலங்கை தரப்பில் ஒஷடி ரணசிங்கே மட்டும் 2விக்கெட்களை எடுத்தார். தொடர்ந்து விளையாடிய இலங்கை வீராங்கனைகள்  இங்கிலாந்து  பந்து வீச்சை சமாளிக்க முடியாமல்  திணறினர். முடிவில் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் இங்கிலாந்து பெண்கள் அணி 96 ரன்கள் வித்தியாசத்தில்  வெற்றிப் பெற்றது. அத்துடன் டி20 தொடரின் அனைத்து போட்டிகளிலும் தோற்றதால் இலங்கை ஒயிட்வாஷ் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக ஹன்சிமா கருணரத்னே மட்டும் 44(53) ரன்கள் எடுத்தார்.இங்கிலாந்து தரப்பில் கேத்தி கிராஸ் 2 விக்கெட்களும்,  ப்ரேயா டாவிஸ், லின்சி சுமித்,  லாரா மார்ஷ், ஹீதர் நைட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்ைட எடுத்தனர். ஒருநாள், டி20 தொடரின் அனைத்து ேபாட்டிகளையும் வென்ற உற்சாகத்துடன் இங்கிலாந்து ஊர் திரும்புகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Women ,Sri Lanka , Women's T20, Sri Lanka, England
× RELATED பெண் கைதிகள் சென்ற வேனில் தீ