×

மயாமி ஓபன் டென்னிஸ் பிளிஸ்கோவா, ஹாலெப், ஃபெலிக்ஸ் அரையிறுதிக்கு தகுதி

மயாமி:  மயாமி ஓபன் டென்னிஸ் போட்டியில்  பெண்கள் ஒற்றையர் போட்டியில் பிளிஸ்கோவா,  ஹலேப் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதிப் பெற்றனர். ஆண்கள் பிரிவில் ஃபெலிக்ஸ் அரையிறுதிக்கு முன்னேறினார். அமெரிக்காவின் மயாமி நகரில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டிகள் நடைப்பெற்றன. நேற்று நடைப்பெற்ற கடைசி காலிறுதிப் போட்டியில் செக் குடியரசின்  கரோலினா பிளிஸ்கோவா, சக நாட்டு வீராங்கனை மார்கெடா வொண்டரவசோவா உடன்   மோதினார்.  அதில் பிளிஸ்கோவா 6-3 , 6-4 என்ற நேர் செட்கணக்கில்  மார்கெடாவை வீழ்த்த அரையிறுதிக்கு தகுதிப் பெற்றார். இந்திய நேரப்படி இன்று நடைபெறும் முதல்  அரையிறுதியில்   எஸ்டோனியாவின் அனெட் கோன்டாவய்ட்(19வது ரேங்க்), ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்தி(11) உடன் மோத உள்ளார். தொடர்ந்து 2வது அரையிறுதியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா(7வது ரேங்க்)), ரூமேனியாவின்   சிமோனா ஹாலெப்(3) ஆகியோர் விளையாட உள்ளனர். இதே போல் நேற்று நடைப்பெறற ஆண்கள் இரட்டையர் பிரிவின்  காலிறுதிப் போட்டி ஒன்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- டெனிஸ் ஷபோவலாவ்(கனடா) இணை  அமெரிக்காவின்  மைக்கல் பிரயான் - பாப் பிரயான் இணையிடம்  6-3, 6-4 என்ற புள்ளி கணக்கில் தோற்று வெளியேறியது.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில்  ரோஜர் பெடரர் 4வது சுற்றில்  ரஷ்யாவின் டேனியல் மெத்வேதவை  6-4, 6-2 என்ற புள்ளி கணக்கில் வென்ற காலிறுதிக்கு முன்னேறினார். தொடர்ந்து நேற்று நடைப்பெற்ற முதல் காலியிறுதிப் போட்டியில்  கனடாவின் ஃபெலிக்ஸ் அக்கெர், குரேஷியாவின்   போர்னா கோரிச்சை  7-6, 6-2 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார்.  இரண்டாவது காலிறுதியில் அமெரிக்காவின் ஜான் ஐஸ்னர் 7-6, 7-6 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் பாடிஸ்டா அகுத்தை போராடி வென்றார். இன்ற நடைபெறும் 3வது காலியிறுதியில்  கனடாவின்  டெனிஸ் ஷபோவலாவ் - அமெரிக்காவின்  பிரான்சிஸ் டியபோ, 4வது காலியிறுதியில் தென்ஆப்ரிக்காவின் கெவின் ஆண்டர்சன்- சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் ஆகியோர் விளையாடுகின்றனர்.முதல் அரையிறுதியில் அமெரிக்கான ஜான் ஐஸ்னர்(9வது ரேங்க்) - கனடாவின் 18 வயதான ஃபெலிக்ஸ் அக்கெர்(57) ஆகியோர் களம் காணுகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Halle ,Miami Open Tennis Bliscova ,semi-finals ,Felix , Miami Open Tennis, Felix,
× RELATED ரஞ்சி அரையிறுதிக்கு முன்னேறியது தமிழ்நாடு