×

சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா - கொரியா

ஈபோ: மலேசியாவில்  நடைபெறும் சுல்தான்  அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டியின் இறுதிப்போட்டியில் நாளை  இந்தியாவும், தென் ெகாரியாவும் மோதுவது உறுதியாகி உள்ளது. மலேசியாவின் ஈபோ நகரில் 28வது சுல்தான் அஸ்லான் ஷா ஹாக்கிப் போட்டிகள் நடக்கிறது. இதில் இந்தியா, மலேசியா,ெதன் கொரியா, ஜப்பான், கனடா, போலாந்து ஆகிய நாடுகள் விளையாடுகின்றன. இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ள இந்தியா  10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது.  கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் 2வது இடத்தை பிடித்துள்ள கொரியாவும்  10 புள்ளிகளை பெற்றுள்ளது. மலேசியா , கனடா தலா 6 புள்ளிகளுடனும்,  ஜப்பான் 3 புள்ளிகளுடனும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஆனால் போலாந்து புள்ளிகள் ஏதும் பெறாமல் கடைசி இடத்தில் உள்ளது. இன்று கடைசி சுற்று  போட்டிகள் நடைபெறுகின்றன.  அதில் இந்தியா- போலாந்து ,  கொரியா - ஜப்பான்,  மலேசியா - கனடா அணிகள் மோத உள்ளன.இந்தப் போட்டிகளின் முடிவுகள் எப்படி இருந்தாலும்  இந்தியா, கொரியாவின் இறுதிப் ேபாட்டி வாய்ப்பு பாதிக்கப்படாது.

அதனால் நாளை சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா- கொரியா அணிகள் மோதுவது உறுதியாகி உள்ளது. இந்த ஆண்டு இந்த 2 அணிகளும் மோதிய லீக் போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. ஏற்கனவே இந்த  அணிகள் 2010ம் ஆண்டு இறுதிப் ேபாட்டியில் மோத இருந்தன. மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டதால் இரண்டு அணிகளும் சாம்பியன் பட்டத்தை பகிர்த்துக் கொண்டன. அதுதான் கொரியா வென்ற ஒரே அஸ்லான் கோப்பை சாம்பியன் பட்டம். அது தவிர 4 முறை 2வது இடத்தை பிடித்தது கொரியா. இந்தியா 1985, 1991, 1995, 2009 ஆண்டுகளிலும் பட்டம் வென்றுள்ளது. அதுமட்டுமின்றி 2008, 2016ம ்ஆண்டுகளில் 2வது இடத்தை பிடித்தது இந்தியா.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hockey final ,Sultan Azlan Shah ,India ,Korea , Sultan Azlan Shah hockey, India, Korea
× RELATED மத பிரச்சனைகளை கிளப்பி பாஜக வாக்குபெற முயற்சி: முத்தரசன்