×

இந்திய மகளிர் கால்பந்து அணி கேப்டனாக தமிழக எஸ்.ஐ இந்துமதி

புதுடெல்லி: இந்திய மகளிர் கால்பந்து அணி கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் இந்துமதி கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார்.உஸ்பெகிஸ்தானில் பயிற்சி பெற்று வரும் இந்திய மகளிர் கால்பந்து அணி, அங்கு 2 நட்பு ரீதியிலான சர்வதேச போட்டிகளில் விளையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உஸ்பெகிஸ்தான் அணியுடன் நாளையும், ஏப். 8ம் தேதி பெலாரஸ் அணியுடனும் இந்தியா மோதுகிறது. இந்த 2 போட்டிகளுக்கான இந்திய அணி கேப்டனாக நடுகள வீராங்கனை இந்துமதி கதிரேசன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளராகப் பணி புரிவது குறிப்பிடத்தக்கது.இந்துமதி கூறுகையில், ‘உஸ்பெகிஸ்தானில் நடக்கும் 2 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இது எனக்கு கிடைத்த மிகப் பெரிய கவுரவம். பெருமையாக உள்ளது. முன்னதாக செர்பியா, ரஷ்யா, உக்ரைன் அணிகளுக்கு எதிராக துருக்கியில் நடந்த நட்பு ஆட்டங்களில் சங்கீதா பஸ்போர் கேப்டனாக இருந்தார். இளம் வீராங்கனைகளை அவர் மிகச் சிறப்பாக வழிநடத்தினார். இது அத்தனை எளிதானது அல்ல. என்னால் முடிந்த வரை சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன். அணியாக அனைவரும் ஒருங்கிணைந்து விளையாட ஊக்கமளிப்பேன்’ என்றார். …

The post இந்திய மகளிர் கால்பந்து அணி கேப்டனாக தமிழக எஸ்.ஐ இந்துமதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,SI Indumati ,women's football team ,New Delhi ,Assistant ,Inspector ,Indumati Kathiresan ,Indian women's football team ,Uzbekistan ,SI ,Indumati ,Dinakaran ,
× RELATED அனைத்து நியாயவிலைக் கடைகளிலும்...