×

சேலத்தில் பறக்கும்படையினர் நடிகை நமீதா காரில் சோதனை: எதிர்ப்பு தெரிவித்து கடும் வாக்குவாதம்

சேலம்: சேலத்தில் நடிகை நமீதா காரில் பறக்கும்படை சோதனை நடத்த எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் கொண்டலாம்பட்டி அருகே, பறக்கும் படை அதிகாரி ஆனந்த்விஜய் தலைமையிலான குழுவினர்  நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட முயன்றனர். அதற்கு காரில் வந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த காருக்குள் இருந்த நடிகை நமீதாவும், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நமீதாவின் கணவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், நமீதா காரில் இருந்து கீழே இறங்கவில்லை.

நீண்ட நேர வாக்குவாதத்திற்கு பின், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தான் சோதனை நடத்தப்படுகிறது என பறக்கும் படையினர் கூறினர். இதையடுத்து, காரில் இருந்த பெட்டிகளை வெளியே எடுத்து வைத்து சோதனை நடத்த அனுமதி வழங்கினர். அங்கிருந்த பெண் போலீஸ் சோதனை செய்தார். சோதனையில்  பணம், நகை எதுவும் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து காரை பறக்கும்படையினர் அனுமதித்தனர். கடந்த வாரம் சினிமா பாடகரும், நாட்டுப்புற கலைஞருமான புஷ்பவனம் குப்புசாமி வந்த காரை பறக்கும்படையினர் ஜலகண்டாபுரம் பகுதியில் மடக்கி சோதனை நடத்தினர். இதற்கு அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Namitha Crawley , Salam, Flying, actress Namitha
× RELATED பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 18-ல் வெளியீடு