×

கம்பராமாயணத்தை எழுதியது காரப்பாக்கம் கணபதின்னு சொல்லாம விட்டாரே? திமுக பேச்சாளர் ஈரோடு இறைவன் தடாலடி

திமுக பேச்சாளர் ஈரோடு இறைவன் பேசியதாவது: தஞ்சாவூர்ல போய் நின்னுட்டு முதல்வர் சொல்றாரு. கம்பராமாயணத்தை எழுதியது யார் தெரியுமா? சேக்கிழாராமா. நல்ல வேளை காரப்பாக்கம் கணபதின்னு சொல்லாம விட்டாரு. அங்க ஒருத்தர் தெர்மாகோல் அமைச்சர். அவரு நேரா போய் அணையில தெர்மாகோல் போட்டிகிட்டிருக்கிறாரு. பி.ஏ கேட்கிறான். இது என்னாது சார் என்கிறான். இது வாத்து அல்ல டா.. தெர்மாகோல்ங்கிறாரு. அவர் ஒரு அமைச்சர்.  அப்புறம் திண்டுக்கல் சீனிவாசன்னு ஒரு மந்திரி. இப்ப கூட பிரதமர் வாஜ்பாய் அற்புதமான பட்ஜெட்டை போட்டிருக்கிறார். யாரு?.. வாஜ்பாய்.. செத்து எத்தனை நாள் ஆச்சி. அவர் அருமையான பட்ஜெட்டை போட்டிருக்கிறாராம். விவசாயிகளுக்கு ரெண்டாயிரம் தரப்போறார்னு வேற சொல்றாரு.  இன்னொரு பக்கம் அவனுங்க சைடுலேயே கூட்டணியில எனக்கு உள்ளபடியே சந்தோசம் என்றால், ஜி.கே.வாசன் அந்த பக்கம் போய்ட்டாரு. பத்திரிக்கைகாரங்க போய் கேட்பாங்க. கூட்டணியை முடித்துவிட்டீர்களா?. நாங்கள் கூட்டணியை பேசிக் கொண்டிருக்கிறோம். விரைவில் கூட்டணியை முடிவு செய்வோம் என்பார். தேர்தலே முடிஞ்சிபோயிரும். இவ்வாறு அவர் பேசினார்


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karpakkam Ganapatnu ,Sallama ,Dhalaladi ,spokesperson ,DMK ,Erode , Kambayamayam, Karappadam Ganapathi, DMK
× RELATED சிலை உடைக்கப்பட்ட விவகாரம்: பணம்...