×

துரோகத்தை சாய்க்க நடக்கும் போராட்டம்: தர்மம் வெல்ல என்னை ஆதரியுங்கள்: தஞ்சை சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் ரெங்கசாமி வீதி வீதியாக வாக்கு சேகரிப்பு

தஞ்சை: தற்போது நடக்கும் தேர்தல் தர்மத்துக்கும், துரோகத்துக்கும் நடக்கும் போராட்டமாகும். தர்மம் வெற்றி பெற எங்களை ஆதரிக்க வேண்டும் என்று தஞ்சை சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் ரங்கசாமி நேற்று வீதிவீதியாக வாக்கு சேகரித்தார். தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசாமி கோயிலில் நேற்று மாலை அமமுக வேட்பாளர் ரெங்கசாமி தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை நடந்தது. அமமுக அமைப்பு செயலாளர் பண்ணைவயல் பாஸ்கர், தஞ்சை மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஷ்வரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து தஞ்சை பூக்காரத்தெரு, பர்மா காலனி, விளார் ரோடு ஆகிய பகுதிகளில் திறந்த ஜீப்பில் சென்று அமமுக வேட்பாளர் ரங்கசாமி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசும்போது, 2011ம் ஆண்டு நான் எம்எல்ஏவாக இருந்தபோது தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தஞ்சை மாநகருக்கு தேவையான திட்டங்கள் குறித்து கோரிக்கை வைத்தேன். இதையடுத்து ஜெயலலிதா உத்தரவின்படி தஞ்சை மாநகரில் பாலங்கள், புதிய கலெக்டர் அலுவலகம், மல்டி ஸ்பெசாலிட்டி மருத்துவமனை, மாநகராட்சி புதிய அலுவலகம் கட்டப்பட்டது.

தஞ்சை நகரில் முழுமையாக குடிநீர் பிரச்னையை தீர்க்கும் வகையில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் குடிநீர் திட்டம் கொண்டு வரப்பட்டு நகரின் குடிநீர் பிரச்னை தீர்த்து வைக்கப்பட்டது. தஞ்சை பெருவுடையார் கோயிலில் 100 ஆண்டுகளாக தேர் ஓடாத நிலையில் புதிய தேர் செய்து தேரோட்டத்தை நான் எம்எல்ஏவாக இருந்தபோது செயல்படுத்தினேன். இவ்வாறு பல்வேறு நலத்திட்டங்கள் நான் எம்எல்ஏவாக இருந்தபோது செய்து தரப்பட்டது. தற்போது மக்கள் விரோத எடப்பாடி அரசு நீட், மீத்தேன் உள்ளிட்ட மக்களுக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை மத்திய அரசின் அடிமையாக இருந்து கொண்டு செயல்படுத்தி வருகிறது. தற்போது நடக்கும் தேர்தல் தர்மத்துக்கும், துரோகத்துக்கும் நடக்கும் போராட்டமாகும். துரோகத்தை சாய்க்க தர்மம் வெற்றி பெற எங்களுக்கு ஆதரவு தாருங்கள். மத்திய அரசின் தமிழக விரோத மனப்பான்மையை முறியடித்து தமிழக நலனை பாதுகாக்க கூடிய ஒரே முதுகெலும்பு உள்ள இளம் அரசியல் தலைவர் தினகரன் தான். அவரது தலைமையில் தான் தமிழகம் பாதுகாப்பாக இருக்கும். எனவே தஞ்சை சட்டமன்ற வேட்பாளரான என்னை வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : candidate ,Rangaswamy Street ,Dharma: Thanjavur Assembly Constituency , Support me to win the Dharmam, Tanjai Assembly Constituency Amendment candidate Rangasamy
× RELATED மசூதி மீது அம்பு விடுவது போன்ற சைகை...