×

வேட்பாளர் பெயரை மறந்த ஓபிஎஸ் ஆளில்லாத கடையில் டீ ஆத்தினார்

உளுந்தூர்பேட்டை: விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் கூட்டணி கட்சியான பாமகவின் வேட்பாளர் பெயரை மறந்த ஓபிஎஸ், ஆளில்லாத கடையில் டீ ஆத்துவதைப் போல, ஆட்களே இல்லாத இடத்தில் வாக்கு சேகரித்தார். விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் வடிவேல் இராவணன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நேற்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையம் பகுதியில் மேடையில் இருந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது: மத்தியில் ஒரு நிலையான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இந்த கூட்டணி அமைந்துள்ளது. தமிழக அரசின் சொந்த நிதியில் இருந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கனவு திட்டமான அனைவருக்கும் கான்கிரீட் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் இதுவரையில் சுமார் 6 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. 2023ம் ஆண்டிற்குள் அனைத்து குடிசை வீடுகளும் கான்கிரீட் வீடுகளாக கட்டி கொடுக்கப்படும் என்றார்.

இந்த பிரசாரத்தின் போது அடிக்கடி பாமக வேட்பாளர் வடிவேல் இராவணன் பெயரை ஓ.பன்னீர்செல்வம் மறந்த போது அருகில் இருந்த எம்எல்ஏ குமரகுரு வேட்பாளரின் பெயரை கூறிக்கொண்டே இருந்தார். உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இருந்து பேசி முடித்தபிறகு திறந்த வாகனத்தில் விழுப்புரம் நோக்கி சென்றார். அப்போது காவல்நிலையத்தில் இருந்து அரசு போக்குவரத்து கழக பணிமனை வரையில் திறந்த வாகனத்தில் நின்றுக்கொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குசேகரித்தபடி துணை முதல்வர் பன்னீர்செல்வம் சென்ற போது பகல் 1.45மணி என்பதால் கடும் வெயிலினால் சாலையின் ஓரம் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆள் இல்லாத இடத்தில் வாக்கு சேகரித்தபடி சென்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. பிரசாரத்தின் போது அடிக்கடி பாமக வேட்பாளர் வடிவேல் இராவணன் பெயரை ஓ.பன்னீர்செல்வம் மறந்த போது அருகில் இருந்த எம்எல்ஏ குமரகுரு வேட்பாளரின் பெயரை கூறிக்கொண்டே இருந்தார்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dee ,candidate ,OBS shop , Candidate, forgotten OBS, unmanned shop, tea
× RELATED எழும்பூர் ஆர்பிஎப் அலுவலகத்தில்...