×

கோவை சிறுமிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

கோவை: கோவை சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது. கோவை பண்ணிமடை பகுதியில் தனது வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டிருந்த சிறுமி மாயமானார். இதனை தொடர்ந்து அவர் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த சிறுமியானது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இது குறித்து காவல் துறையினர் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

மேலும் இந்த சிறுமியை வன்கொடுமை செய்ததற்காக அவரது வாயையும் மூக்கையும் துணியால் வைத்து அழுத்தியும் கழுத்தில் கயிறு போல ஒரு பொருளை வைத்து அழுத்தியும் பாலியல் வன்கொடுமை செய்தததும் பிரேதபரிசோதனையில் தெரிய வந்தது. மேலும் பரிசோதனை செய்ததில் சிறுமி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதும் அவரது பிறப்புறுப்பை பரிசோதனை செய்ததில் அவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது. இந்த பாலியல் வன்கொடுமையானது ஒருவர் மட்டுமின்றி கூட்டு பாலியல் வன்கொடுமையாக நடைபெற்றிருப்பது தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Coimbatore ,gang-rape incident , Coimbatore girl, collective sex, abusive, postmortem
× RELATED அட்டுக்கல் பகுதியில் யானை தாக்கி படுகாயம் அடைந்த தொழிலாளி உயிரிழப்பு!!