×

ஆத்தூரில் அங்கன்வாடி மைய கட்டிடத்தை செப்பனிட்ட இளைஞர்கள்

ஆத்தூர்: ஆத்தூரில், பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டிடத்தை இளைஞர்களே ஒன்றிணைந்து செப்பனிட்டனர்.  சேலம் மாவட்டம் ஆத்தூர் நகரில் இளைஞரணி என்னும் பெயரில் சமூக சேவை அமைப்பினை ஆத்தூர் நகரப்பகுதியில் படித்த பட்டதாரிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கி உள்ளனர். இந்த இளைஞரணியினர் ஆத்தூர் பகுதியில் உள்ள பழுதடைந்துள்ள சிறுவர்கள் கல்வி கூடங்களான அங்கன்வாடி கட்டிடங்களை சீரமைக்கும் பணியை செய்ய தீர்மானித்துள்ளனர்.

அதன் முதற்கட்டமாக கோட்டை பகுதியில் உள்ள அங்கன்வாடி கட்டிடத்தின் பழுதுகளை நீக்கி சீரமைத்ததோடு சிறுவர்களின் கண்ணுக்கு விருத்தளிக்கும் வகையில் பல வண்ண பெயிண்டுகளை கட்டிடத்தின் சுவர்களுக்கு பூசியுள்ளனர். அதில், பல்வேறு உருவங்களை வரைந்துள்ளனர். இந்த பணியில் இளைஞரணி அமைப்பினைச் சேர்ந்த மணி, சந்திரன், ராம்.சந்திரன், ராம்.சண்முகம், விக்கி, பூவரசன் ஆகியோர் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வாழ்வில் முதல் அடி பள்ளியில் எடுத்து வைக்கும் சிறுவர்களின் மனம் மகிழ்ச்சியில் திழைக்க வேண்டும். கல்விக்கூடத்தில் அமைதியான சூழலை ஏற்படுத்தும் விதமாக அங்கன்வாடி மைய கட்டிடத்தை செம்மைபடுத்தி வண்ணமயமாக உருவாக்கும் பணியை மன நிறைவோடு செய்யும் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : building ,Athur ,Anganwadi Center , Attur, Anganwadi, youth
× RELATED கொல்கத்தாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து 9 பேர் பலி