கோவை, பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் பெண்கள் வெளிநாடுகளுக்கு விற்பனை : ஈஸ்வரன் பகீர் தகவல்

நாமக்கல்: கோவை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்களை வெளிநாடுகளுக்கு விற்றிருப்பதாக கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் கூறியுள்ளார். நாமக்கல்லை அடுத்த சேந்தமங்கலத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய அவர், பொள்ளாச்சியில் ஏராளமான பெண்கள் ஏமாற்றப்பட்டு, மிரட்டப்பட்டு அவர்களை வைத்து ஆபாச படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தார். கடந்த 7 ஆண்டுகளில் 86 சந்தேக மரணங்கள் பொள்ளாச்சியில் நடைபெற்றிருப்பதாக அவர் கூறியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், ஆளுங்கட்சியினருக்கு தொடர்பு இருப்பதாக நான் கூறினேன். இதுகுறித்து பொது மேடையில் விவாதிக்க தயாரா? என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுள்ளார். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். இடத்தையும் நான் தேர்வு செய்கிறேன். அமைச்சர் தேதி மட்டும் கொடுக்கவேண்டும். அதுவும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் விவாதம் வைத்து கொள்ளலாம் என பேசினார்.

பொள்ளாச்சியில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நாள்தோறும் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகி மக்களை வேதனையடைய செய்து வருகிறது. சிறுமி ஒருவர் கொல்லப்பட்டு திருநாவுக்கரசுவின் பண்ணை வீட்டின் பின்புறம் புதைக்கப்பட்டதாக பெண் ஒருவர் பேசும் ஆடியோ நேற்று முன்தினம் வெளியானது. இத்தகைய சூழலில் பெண்கள் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டிருப்பதாக ஈஸ்வரன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Pollachi ,Coimbatore , Coimbatore, Pollachi, women's sales, overseas
× RELATED பொள்ளாச்சி சம்பவம் குறித்த...