×

நாட்டு மக்களுக்கு உரையாற்றிய மோடிக்கு ராகுல் கிண்டல் வாழ்த்து

புதுடெல்லி: செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் வீழ்த்திய சாதனை தொடர்பாக நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடியை ராகுல் காந்தி கிண்டல் செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார். விண்வெளியில் இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாக்கும் வகையில், ‘மிஷன் சக்தி’ என்ற திட்டம் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்க முடியும் என  நிரூபிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரதமர் நநேரந்திர மோடி நேற்று மதியம் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இந்த திட்டம் எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல எனவும், விண்வெளித் துறையில் அதிக சக்தி  வாய்ந்த நாடாக இந்தியா முன்னேறி உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

வரும் ஏப்ரல் 11ம் தேதி மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தனது சாதனையை விளக்கும் வகையில் இந்த உரையை ஆற்றியதாக எதிர்கட்சிகள்  குற்றம்சாட்டியுள்ளன.  மோடியின் உரையை கிண்டல் செய்யும் விதமாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டிவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் இந்த ேசாதனையை  வெற்றிகரமாக நிகழ்த்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு  அமைப்புக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். உங்கள் பணி என்னை பெருமை  கொள்ள செய்கிறது. இந்த தருணத்தில் பிரதமர் மோடிக்கு `உலக நாடக  தின’ வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Rahul Kantal ,nationals ,Modi , Speaking,people,country, Rahul, Modi, Greeting, greetings
× RELATED கங்கை மாதா என்னை மடியில் ஏந்திக் கொண்டார் : பிரதமர் மோடி