×

வட மாநிலத்தவரை கவர்வதற்காக ‘தாண்டியா’ ஆட்டம் போட்ட செல்லூர் ராஜு

மதுரை மாநகர் மாவட்ட அதிமுக அவைத் தலைவர் புதூர் துரைப்பாண்டி (75). சமீபத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் துரைப்பாண்டி கடந்த 23ம் தேதி இறந்தார். இதனால் புதூரில் அதிமுக  தேர்தல் அலுவலகம் திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டது. அவரின் இறுதிச்சடங்கு கடந்த 24ம் தேதி நடந்தது. இதில் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்துகொண்டு இறுதி மரியாதை செலுத்தினார். துக்க நிகழ்ச்சி முடிந்து மாலை 5.30 மணி அளவில் கீழவாசல் அரசமரம் அருகே வடமாநிலத்தவர்கள் நடத்திய ஹோலிப்பண்டிகை விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக வேட்பாளர்  ராஜ்சத்யன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது வட மாநிலத்தவர்களுடன் சேர்ந்து, ஹோலிப்பண்டிகைக்கான ‘தாண்டியா’ ஆட்டம் ஆடினார் செல்லூர் ராஜூ. இதனை பார்த்த அதிமுக  தொண்டர்கள், பல ஆண்டுகால நண்பரும், மாவட்ட அவைத்தலைவரின் இறுதிச்சடங்கு முடிந்த ஒரு மணிநேரத்திற்குள் இப்படி ஒரு ஆட்டம் தேவையா என வருத்தத்துடன்  பேசிக்கொண்டனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Selvar Raju ,state ,North , attract, Northern State, Seloor Raju, 'Thandia'
× RELATED அண்ணா சாலையில் உள்ள ஓட்டலில் இடம் மாறி...