×

போபால் தொகுதியை பிடிக்க தீவிரம் முன்னாள் முதல்வர்கள் ஒரே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு

மத்தியப் பிரதேச மாநிலம் போபால் மக்களவை தொகுதியை கைப்பற்ற  மாநிலத்தின் முன்னாள் முதல்வர்கள் திக்விஜய்சிங் மற்றும் சிவ்ராஜ்சிங் சவுகான் ஆகியோர் நேருக்கு நேர் மோத உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் போபால் மக்களவை தொகுதியை கைப்பற்ற காங்கிரஸ் மற்றும் பாஜ இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. போபால் மாநிலத்தின் தலைநகர் என்பதால் அந்த தொகுதியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற முனைப்பில் இரண்டு கட்சிகளும் உள்ளன. இதற்காக காங்கிரஸ் மற்றும் பாஜ, பிரபலமான வேட்பாளர்களை நிறுத்த முடிவு செய்துள்ளன. அதன்படி, மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய்சிங்கை போபால் தொகுதியில் களமிறக்க கட்சி மேலிடம் முடிவு செய்து அவரை வேட்பாளராக அறிவித்தது.

கடந்த 1989ம் ஆண்டில் இருந்து போபால் மக்களவை தொகுதியில் பாஜ தொடர்ந்து வெற்றியை பெற்று வருவதால் காங்கிரஸ், மேலிடம் இந்த அதிரடி முடிவை எடுத்தது. பலம் பொருந்திய வேட்பாளர் மூலமாக போபாலை கைப்பற்ற காங்கிரஸ் கணக்கு போட்டது. இந்நிலையில், பாஜ.வும் வலுவான வேட்பாளரை நிறுத்த ஆலோசனை மேற்கொண்டுள்ளது. அதன்படி, முன்னாள் முதல்வரும் பாஜ மூத்த தலைவருமான சிவ்ராஜ்சிங் சவுகானை போபால் தொகுதி வேட்பாளராக நிறுத்த பாஜ நிர்வாகிகள் கட்சி மேலிடத்தில் வலியுறுத்தி வருகின்றனர். கட்சி தலைமையும் சவுகானை களமிறக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. போபால் தொகுதியில் வெற்றி பெறுவதை மாநில பாஜ கவுரவ பிரச்னையாக கருதி வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : constituency ,Bhopal , Bhopal, Chief Minister,
× RELATED பா.ஜ போட்டியின்றி தேர்வு; சூரத் தொகுதி...