×

பணப்பட்டுவாடாவுக்கு ஆளும்கட்சி பலே யுக்தி

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படையினர் தமிழகத்தில் ஆங்காங்கே சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஆளும் கட்சியினர் புதிய யுக்தியை கையில் எடுத்துள்ளனர். அவர்கள் அரசு அலுவலகங்களை பயன்படுத்தி பணப்பட்டுவாடா செய்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது, தேர்தல் நடத்தை முறை அமலுக்கு வந்தால் எம்எல்ஏ, கவுன்சிலர், கூட்டுறவு சங்க தலைவர் அலுவலகங்களை பூட்டி சீல் வைக்க வேண்டும். எம்எல்ஏ, கவுன்சிலர் அலுவலகங்கள் மட்டுமே பூட்டப்பட்டுள்ளது. ஆனால், கூட்டுறவு சங்க தலைவர் அலுவலகங்கள் பூட்டி சீல் வைக்கப்படவில்லை. இதை பயன்படுத்தி கொண்டு, அந்த அலுவலகத்திற்கு கூட்டுறவு சங்க தலைவர் தங்களது கட்சியினரை அழைத்து வருகின்றனர். இங்கு வைத்து தான் தேர்தல் செலவுக்காக பணப்பட்டுவாடா நடக்கிறது.

குறிப்பாக, சென்னையில் டியுசிஎஸ் அலுவலகங்களில் ஆளும் கட்சியினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுகின்றனர். டியுசிஎஸ் பணிபுரியும் ஊழியர்கள் தங்களது அலுவலகத்தில் நடப்பதை வெளியில் சொல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தேர்தல் பறக்கும் படையினருக்கு கூட்டுறவு சங்க தலைவர் அலுவலகத்தில் ரெய்டு நடத்த உத்தரவிடும் பட்சத்தில் பணப்பட்டுவாடா நடப்பதை தடுக்க முடியும் என்று கூட்டுறவு சங்க ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Many ,governments , Payment, ruling party
× RELATED கருடன் கருணை