×

ட்வீட் கார்னர்: கிரிக்கெட் பிடித்திருக்கிறது... பெல்ப்ஸ் உற்சாகம்!

அமெரிக்க நீச்சல் நட்சத்திரம் மைக்கேல் பெல்ப்ஸ் (33 வயது) இந்தியா வந்துள்ளார். ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்களை நேற்று சந்தித்து உரையாடிய அவர், சிறிது நேரம் பேட்டிங் வலைப்பயிற்சியும் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘கிரிக்கெட் விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. முதல் முறையாக பேட் செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது என்றாலும், கிரிக்கெட்டில் தீவிரமாக ஈடுபடும் எண்ணமில்லை. சென்னை - டெல்லி அணிகள் மோதிய ஆட்டத்தை ரசித்து பார்த்தேன். ரசிகர்களின் ஆரவாரமும் உற்சாகமும் வியப்பூட்டுவதாக இருந்தது. சிக்சர்கள் பறந்தபோது என்னையும் அந்த உற்சாகம் தொற்றிக் கொண்டது. அடுத்த முறை இந்தியா வரும்போது கிரிக்கெட் விளையாடுவேன் என நினைக்கிறேன்’ என்றார். மைக்கேல் பெல்ப்சுக்கு ரிஷப் பன்ட் பேட்டிங் நுணுக்கங்களை சொல்லித் தரும் புகைப்படத்தை டெல்லி கேப்பிடல்ஸ் அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட, அது உடனடியாக வைரலானது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Corner ,Phelps , Tweets garner, cricket, phelps
× RELATED ட்வீட் கார்னர்... ரசிகர்கள்தான் இன்ஜின்கள்!