×

ராகுலை சந்தித்து காங்.கில் சேர்ந்தார் நடிகை ஊர்மிளா: மும்பையில் போட்டி?

தமிழில் இயக்குனர் ஷங்கர் இயக்கிய ‘இந்தியன்’ உள்ளிட்ட பல்வேறு மொழி பல படங்களில் நடித்தவர் ஊர்மிளா மடோன்ட்கர் (45). பாலிவுட்டில் ‘ரங்கீலா’ படம் மூலம் மிகவும் பிரபலமான அவர், முன்னணி நடிகையாக திகழ்ந்தார். இவர், டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுலை நேற்று நேரில் சந்தித்து அக்கட்சியில் சேர்ந்தார். அவரை வாழ்த்தி வரவேற்றார் ராகுல்.  பின்னர், பத்திரிகையாளர்களிடம் பேசிய ஊர்மிளா, ‘‘தேர்தலுக்காக நான் காங்கிரசில் சேரவில்லை. தேர்தல் முடிந்ததும் கட்சியை விட்டு சென்று விடவும் மாட்டேன். நேரு, படேல் போன்ற தலைவர்களை பின்பற்றிய குடும்பத்திலிருந்து வந்தவள் நான். கடந்த 5 ஆண்டாக நம் நாட்டில் கருத்து சுதந்திரம் நசுக்கப்படுகிறது. எனவே, சுதந்திரத்தை புரிந்துள்ள, சுதந்திரத்திற்காக போராடிய கட்சியில் என்னை இணைத்துக் கொண்டு அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளேன்’’ என்றார். இவருக்கு மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட சீட் தரப்படும் என தகவல்கள் கூறுகின்றன. அப்படி தரப்பட்டால், பாஜ எம்பி கோபால் ஷெட்டியுடன் அவர் மோத வேண்டியிருக்கும்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Actress ,Mumbai , Rahul, Congress, actress Urmila
× RELATED விவசாயிகளுக்கு நிலம் வழங்கிய நடிகை