×

வயது வெறும் எண்கள்தான் என்பதை நாங்கள் கடந்த ஐபிஎல் தொடரிலேயே நிரூபித்துவிட்டோம்: பிராவோ

டெல்லியில் நேற்று நடந்த 12 வது ஐபிஎல் தொடரின் 5 வது லீக் ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸின் இந்த வெற்றி இந்த ஐபிஎல் தொடரில் 2வது வெற்றியாகும். இதுவரை நடந்த  ஐபிஎல் தொடர்களில் சிஎஸ்கே பெறும் 81 வது வெற்றியாக இது பார்க்கப்படுகிறது. குறிப்பாக டெல்லியில் நடந்து முடிந்துள்ள இந்த போட்டி  அனுபவம் மற்றும் இளமை இவை இரண்டிற்கும் இடையே நடந்து முடிந்தபோட்டியாகவே எடுத்துக்கொள்ளப்படுகிறது. ஏனெனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும்பாலானவர்களின் வயது 30 வயதை தாண்டிவிட்டது. ஆனால் டெல்லி அணியில் தவான், மிஸ்ரா, இஷாந்த் ஆகிய வீரர்களை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தான்.

ஏற்கனவே சமூக வலைத்தளங்களில்  சென்னை சூப்பர் கிங்ஸை, சென்னை சீனியர் கிங்ஸ் என மீம்ஸ் போட்டு கலாய்த்ததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது .இந்நிலையில்  தான் வாட்சனின் அதிரடி பேட்டிங் மற்றும் பிராவோவின் பந்துவீச்சு சென்னை சூப்பர் கிங்ஸின் வெற்றிக்கு அடித்தளமாக இருந்துள்ளது. இந்த வயது வித்யாசம் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸின் வேகப்பந்து வீச்சாளர் பிராவோவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிராவோ வயது வெறும் எண்கள்தான் என்பதை நாங்கள் கடந்த  ஐபிஎல் தொடரிலேயே நிரூபித்துவிட்டோம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பற்றி பேசும் போதெல்லாம் வயது தொடர்பான விமர்சனங்களை முன்வைக்க யாருமே மறப்பதில்லை. நாங்கள் ஒண்டும் 60 வயது ஆனவர்கள் கிடையாதே, எங்களுக்கு வெறும் 30 வயத்திற்க்குமேல் தான் ஆகிறது. நாங்கள் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறோம் உடல் திறனையும் நாங்கள் நன்றாகவே கவனித்தது வருகிறோம்.

அதே சமயம் எங்களது பலம், பலவீனம் பற்றி எங்களுக்கு நன்றாகவே தெரியும். இவை அனைத்திற்கும் மேலாக  உலகின் தலை சிறந்த கேப்டன் டோனி எங்களை வழிநடத்துகிறார். மற்ற வீரர்களை ஒப்பிடும் பொது எங்களால் வேகமாக விளையாட முடியாவிட்டாலும் சாதுர்யமாக விளையாட முயற்சி செய்கிறோம். அனுபவமிக்க வீரர்கள் எங்களுடன் இருந்தாலும் அனுபவம் மட்டுமே வெற்றியை தேடி தராதே என்று கூறி இருக்கிறார். ந்த வெற்றிக்குறித்து தல டோனி கூறும்போது பீல்டிங்கை தவிர்த்து மற்ற விஷயங்களில் நன்றாக விளையாடியுள்ளோம். பீல்டிங்கில் நாங்கள் செய்யும் தவறுகளை பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும் சரிசெய்து கொள்கிறோம் என்று கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : IPL ,Bravo , Age, Numbers, Past, IPL, Bravo
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி