×

போக்சோ சட்டம் என்றால் என்ன? ஓர் பார்வை

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வரை வழங்க வழிசெய்வது தான் போக்சோ சட்டம் எனப்படுகிறது. குழந்தைகளை பாலியல் குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் சட்டமே போக்சோ சட்டம் ஆகும். குழந்தைகளுக்கு எதிராக செயல்களில் ஈடுபட்டவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் மற்றும் குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் 2012 ஆம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர் மீதான வழக்கை 3 மாதங்களுக்குள் முடித்து தண்டனை வழங்க வேண்டும். குழந்தைகளுக்கு எதிராக இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் தொடர்பான வழக்கை வெளிப்படையாக விசாரிக்க தேவையில்லை.

மேலும் பாதிக்கப்பட்ட குழந்தையின் எதிர்கால நலன் கருதி வழக்கு விசாரணை ரகசியமாக நடத்தப்படும். குற்றம் தொடர்பாக எப்.ஐ.ஆர். பதிவு செய்த பிறகு தான் விசாரிக்க வேண்டும் என்பதில்லை, புகார் வந்த உடனையே  காவல்துறையினர் விசாரணையை தொடங்கலாம். பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டிற்கே சென்று காவல்துறையினர் விசாரணை மேற்கொள்ள வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவரை வைத்துக் கொண்டு பாதிக்கப்பட்ட குழந்தைகளிடம் கண்டிப்பாக விசாரிக்க கூடாது.  காவல்நிலைய எல்லைப் பிரச்சனையை காரணம் காட்டி வழக்கு விசாரணையை அதிகாரிகள் தட்டிக்கழிக்கவும் கூடாது. இந்த விதிகளை காவல்துறை அதிகாரிகள் மீறினால் அவர்கள் மீதும் வழக்குபதிவு செய்வதற்கு  போக்சோ சட்டம் வழிவகை செய்துள்ளது. பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக சிகிச்சை வழங்க வேண்டும் மற்றும் மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படவேண்டும்.  

நீதிபதியின் முன்னிலையில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் ரகசிய வாக்குமூலம் பெறப்பட்ட வேண்டும்.  வாக்குமூலமும் உடல் பரிசோதனை அறிக்கையும் வழக்கிற்கு தேவையான முக்கிய ஆதாரங்கள் ஆகும். 2012 முதல் போக்சோ சட்டம் உள்ளிட்ட கடுமையான சட்டங்கள் இருந்தபோதும், அண்மைக் காலமாக  குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் அதிகரித்தே கொண்டு சென்றதால் கடந்த ஏப்ரலில் புதிய சட்ட திருத்தும் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் 12 வயதிற்க்குட்பட்ட  சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவுகள் கொடுப்பவர்களுக்கு போக்சோவின் கீழ் உச்சபட்ச தண்டனையானா தூக்கு தண்டனை விதிக்கவும்  நீதிமன்றங்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக  அவசர சட்டத்திற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அந்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் சட்டமாக நிறைவேற்றப்பட்டு அமலுக்கு கொண்டுவரப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Poseo, law, what, sight
× RELATED கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த...