லண்டனில் திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தின் போது போர்களில் பயன்படுத்திய வாள், துப்பாக்கி ஏலம்

லண்டன்: திப்பு சுல்தான் 1750-ம் ஆண்டு நவம்பர் 20-ல் தேவனஹள்ளி பகுதியில் பிறந்தவர் ஆவார். இவர் மைசூரின் புலி எனவும் அழைக்கப்பட்டவர். 1782-ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் அரசை ஆண்டவர். திப்பு சுல்தான் ஹைதர் அலியின் மகனாவார். பிரிட்டிஷ் படைகளுடனான இரண்டாம் ஆங்கில-மைசூர்ப் போரில் ஹைதர் அலி வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த திப்பு, தனது தந்தையின் மரணத்திற்குப் பின்னர் மைசூரின் மன்னரானார். திப்பு சுல்தான் ஆட்சிக்காலத்தின் போது போர்களில் பயன்படுத்திய வாள், துப்பாக்கி போன்றவற்றை லண்டனில் உள்ள ஒரு நிறுவனம் ஏலம் விட்டது. இதில் திப்பு சுல்தானின் ஆயுதங்கள் மொத்தம் ஒரு லட்சத்து 7 ஆயிரம் பவுண்ட் (இந்திய மதிப்பில் 97 லட்சத்து 27 ஆயிரத்து 497 ரூபாய்) ஏலம் போனது.

மேலும் வெள்ளி பூண் கொண்ட துப்பாக்கி, மற்றும் குறுவாள் ஆகியவை 60 ஆயிரம் பவுண்ட் (இந்திய மதிப்பில் 54 லட்சத்து 54 ஆயிரத்து 880 ரூபாய்) ஏலத்திற்கு விடப்பட்டது. இந்த துப்பாக்கிகள் மற்ற துப்பாக்கிகளை போல் இல்லாமல் மிகவும் அதிக சேதம் அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் தங்கத்தினால் முலாம் பூசப்பட்ட வாள் காண்போரை கவரக்கூடிய வகையில் இருந்தது. இந்த வாள் 18500 பவுண்டுக்கு (இந்திய மதிப்பில் 16 லட்சத்து 82 ஆயிரத்து 519 ரூபாய்) ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: