×

பழையநீடாமங்கலம் - வையகளத்தூர் இடையே பாலம் இல்லாததால் தண்டவாளத்தை கடந்து செல்லும் மாணவிகள்

நீடாமங்கலம்: நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த  பழைய நீடாமங்கலம்  வையகளத்தூர் இடையே வெண்ணாற்றில் கான்கிரீட் பாலம் கட்ட வேண்டும் என  மாணவர்கள்,பொது மக்கள் எதிர்பார்த்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ரயில்வே ஜங்சனுக்கு சென்னை-மன்னை, கோவை-மன்னை, எர்ணாகுளம்-காரைக்கால், திருப்பதி-மன்னை மற்றும் வாரத்தில் ஒரு முறை மன்னைபகத் கி ஹோதி விரைவு ரயிகளும்,மன்னைமானாமதுரை, திருச்சிகாரைக்கால், திருச்சி,நாகூர், திருச்சி-வேளாங்கன்னி , மன்னைமயிலாடுதுறை பயணிகள் ரயில்கள் செல்கிறது. இதற்கிடையே பல தடவை காரைக்காலிலிருந்து நிலக்கரி ஏற்றி செல்லும் சரக்கு ரயில்,நீடாமங்கலம்,மன்னார்குடி பகுதியிலிருந்து அறுவடை செய்யப்படும் நெல் நீடாமங்கலம் கொண்டு வந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில் இதற்காக நீடாமங்கலம் ரயிவே கேட் நாள் ஒன்றுக்கு சுமார் 17க்கும் மேற்பட்ட தடவைகள் சாத்தப்படுவதால் வெளியூர் செல்லும் பயணிகள் மிகவும் அவதியுற்று செல்கின்றனர். இந்த போக்கு வரத்து நெரிசலை போக்க நீடாமங்கலம் பெரியார் சிலையிலிருந்து பழையநீடாமங்கலம்வையகளத்தூர் இடையில் வெண்ணாற்றில் பாலம் அமைத்தால் ,வேளாங்கன்னி,நாகை மற்றும் அங்குள்ள ஓஎன்ஜிசி நிறுவனங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அரசு மற்றும்  தனியார் பஸ்கள் கேட்டில்  நிற்காமல்  சென்று விடும்.கேட் போட்டாலும் கும்பகோணம்,சென்னை செல்லும் பஸ்கள்,வாகனங்கள் நீடாமங்கலம்-வையகளத்தூர் இடையில் வெண்ணாற்றில் பாலம் அமைத்தால் இதே சாலையில் சென்று அந்த பாலம் வழியாக அங்குள்ள ரயில்வே மேம்பாலம் வழியாக சென்று போக்குவரத்து நெரிசலில் சிக்காமல்  சென்று விடலாம்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bridge ,Old Vidyamangalam - Vayalakathur ,ladies , Palaiyanitamankalam, vaiyakalattur, bridge, female students
× RELATED மீனவர்கள் கோரிக்கையை ஏற்று ஒருநாள்...