×

அமமுகவுக்கு சின்னம் ஒதுக்கும் வரை சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம்: தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி: அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு சின்னம் ஒதுக்கும் வரை சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுரை வழங்கியுள்ளது. முன்னதாக நேற்றைய தினம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னம் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. பொது சின்னத்தை ஒதுக்க பரிசீலனை செய்யுங்கள் என்று தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் பரிந்துரையும் செய்திருந்தது.

இப்படியான ஒரு சூழ்நிலையில் அமமுகவுக்கு சின்னத்தை ஒதுக்கும் வரை  சுயேச்சை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சுயேச்சைகளுக்கு ஒதுக்குவது போல தனித்தனி சின்னம் தான் ஒதுக்க முடியும் என்று முன்பாக தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது. ஆனால் பொதுச்சின்னத்தை வழங்கவேண்டும் என்ற கோரிக்கை டி.டி.வி. தினகரன்  தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : donors ,Election Commission , Emblem, symbol, independence, symbol, assignment, election commission, order
× RELATED மதம், சாதி அடிப்படையில் பிரிவினையை...