×

கோடை சீசனை முன்னிட்டு பூங்காக்களில் சூட்டிங் நடத்த தடை

ஊட்டி: கோடை சீசன் துவங்க உள்ளதால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஏப்ரல் 1ம் தேதி முதல் மூன்று மாதத்திற்கு சினிமா சூட்டிங் நடத்த தடை விதிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் ஏராளமான பூங்காக்கள், அணைகள், புல்வெளிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் காட்சி முனைகள் உள்ளன. இதனால், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம்  ஆகிய மொழி படங்களின் சூட்டிங் எடுக்கப்படுகிறது. குறிப்பாக, ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, படகு இல்லம், குன்னூர் சிம்ஸ் பூங்கா போன்ற பகுதிகளில் பாடல் காட்சிகளை படமாக்கப்படுகிறது. இந்நிலையில், ஆண்டு தோறும் கோடை காலங்களில் மட்டும் ஊட்டியில் சினிமா சூட்டிங் நடத்த தடை விதிக்கப்படுகிறது. ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் வெளி மாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள்.

இது போன்று, சுற்றுலா பயணிகள் அதிகளவு வரும் சமயங்களில் தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய பூங்காக்களில் சினிமா சூட்டிங் நடத்தினால் சுற்றுலா பயணிகளுக்கும், படக்குழுவினரும் இடையூறுகள் ஏற்படுகிறது. இதனால், கடந்த சில ஆண்டுகளாக கோடை காலத்தின் போது(ஏப்ரல் முதல் ஜுன் வரை) மூன்று மாதங்களுக்கு ஊட்டியில் சினிமா சூட்டிங் நடத்த தோட்டக்கலைத்துறை தடை விதிப்பது வழக்கம். அதேபோல் இம்முறை ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 31ம் தேதி வரை மூன்று மாதங்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.  இது குறித்து தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘அரசு தாவரவியல் பூங்கா உள்ளிட்ட முக்கிய பூங்காக்களில் சூட்டிங் நடத்த ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 31ம் தேதி வரை தடை விதிக்கப்படுகிறது. கோடை சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித இடையூறும் இன்றி பூங்காவை சுற்றி பார்க்கலாம்’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : summer season ,parks ,cottages , Summer season, park, suite
× RELATED கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்கா மேம்பாட்டு பணி தீவிரம்