×

பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசித்த பிறகே வருவாய் உறுதித் திட்டம் அறிவிக்கப்பட்டது : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விளக்கம்

சென்னை : சென்னை சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் 20% ஏழைகளுக்கு வருவாய் உறுதி திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் இந்த திட்டத்தால் 5 கோடி குடும்பங்களைச் சேர்ந்த 25 கோடி பேர் வருவாய் உறுதித் திட்டத்தின் கீழ் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

*வருவாய் உறுதித் திட்டம் போன்ற திட்டங்களை கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னாள் செயல்படுத்தியிருக்க முடியாது

*பொருளாதார நிபுணர்களிடம் ஆலோசித்த பிறகே வருவாய் உறுதித் திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

*புதிய பொருளாதார சீர்திருத்தம் காரணமாகவே வருவாய் உறுதித் திட்டம் இப்பொழுது சாத்தியமாகி உள்ளது.

*வருவாய் உறுதித் திட்டம் பல கட்டங்களாக செயல்படுத்தப்படும். பல்வேறு வளர்ந்த நாடுகளில் வருவாய் உறுதித் திட்டம் அமலில் உள்ளது.

*ஆண்டுக்கு 12% வரை நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்தி விகிதம் உயர்ந்து வருகிறது.

*ரூ.200 லட்சம் கோடியாக உள்ள நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பு 5 ஆண்டில் ரூ.400 லட்சம் கோடியாக உயரும்.

*படிப்படியாக வருவாய் உறுதித் திட்டத்தை செயல்படுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி குடும்பங்களையும் இத்திட்டம் சென்றடையும்.

*வருவாய் உறுதி திட்டம் சாத்தியம் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார்.

*நாட்டில் ஏழைகள் யார் ? யார் ? என்று கண்டுபிடிப்பதற்கான புள்ளி விவரங்கள் உள்ளன. இந்திய மக்களில் தற்போது 20 முதல் 25% பேர் ஏழைகளாக உள்ளனர்.

*முறைகேடு இல்லாமல், ஏழைகள் உரிய முறையில் அடையாளம் காணப்பட்டு இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

*மகாத்மா காந்தியின் கனவை நனவாக்கும் வகையில் வருவாய் உறுதித் திட்டம் செயல்படுத்தப்படும்.

*வறுமை மீதான நேரடித் தாக்குதலாக வருவாய் உறுதித் திட்டம் அமையும்

*ஆண்டுக்கு ரூ.72000 திட்டத்தை செயல்படுத்த வல்லுநர் குழு ஒன்று உருவாக்கப்படும்.

*திட்டத்தின் ஒவ்வொரு கூட்டத்தின் போதும் வல்லுநர் குழுவின் ஆலோசனைகள் பெறப்படும்.

*ஏழைக்களுக்கு ஆண்டுக்கு ரூ 72 ஆயிரம் நிதியுதவி திட்டம் முதலில் சோதனை அடிப்படையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் போன்று செயல்படுத்தப்படும்

*தொடக்கத்தில், 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்துவது சாத்தியம் இல்லை என கூறியவர் அருண்ஜெட்லி

*குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டத்தை எதிர்ப்பவர்கள், நாட்டில் வறுமை ஒழிப்புக்கு எதிரானவர்கள்

*ஜிஎஸ்டி என்ற பூமாலையை காங்கிரஸ் தொடுத்து கொடுத்தது. அது குரங்கு கையில் பூமாலையாகிவிட்டது.

*பாஜக பற்றிய பேச்சு வந்தாலே ரூ.15 லட்சம் போடவில்லையே என்றதான் மக்கள் கேட்பார்கள்.

*விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் திட்டத்தை 2014ம் ஆண்டிலேயே ஏன் கொண்டுவரவில்லை. விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கும் பாஜகவின் திட்டம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் திட்டம் போன்றது.

இவ்வாறு ப .சிதம்பரம் செய்தியாளர்களிடம் பேசினார்.  


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : P. Chidambaram ,economists ,consultation , Union Minister, P. Chidambaram, Congress, revenue guarantee scheme, BJP
× RELATED பாஜ தலைவர்கள் கண் மருத்துவரை பார்க்க வேண்டும்: ப.சிதம்பரம் விமர்சனம்