முன்னாள் அமைச்சர் செல்வராஜ் மரணம்

திருச்சி:  திமுக முன்னாள் அமைச்சர் செல்வராஜ் (75). பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தை சேர்ந்த இவர் 1981-84ல் திருச்சி தொகுதி எம்.பி.யாக இருந்தார். மதிமுக ெதாடங்கியபோது, அக்கட்சிக்கு சென்றார். பின்னர் திமுகவில் இணைந்து 2006ல் முசிறி தொகுதியில் வெற்றி பெற்று வனத்துறை அமைச்சராக பதவி வகித்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் செல்வராஜூக்கு சீட் கிடைக்காததால் அதிமுகவில் இணைந்தார். கடந்த சில மாதங்களாக செல்வராஜ் உடல் நலம் பாதிக்கப்பட்டு திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவரை பிரசாரத்தின் இடையே தி.மு.க. தலைவர் முக.ஸ்டாலின் கடந்த வாரம் மருத்துவமனைக்கு சென்று பார்த்து நலம் விசாரித்தார். இந்நிலையில், நேற்று மாலை செல்வராஜ் இறந்தார். அவரது உடல் திருச்சி தில்லைநகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை ஓயாமாரி சுடுகாட்டில் அவரது உடல் தகனம் செய்யப்படுகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Selvaraj ,death , minister Selvaraj, death
× RELATED புழல் சிறை கைதி சாவு