தேர்தல் விதிமுறை மீறல் என குற்றச்சாட்டு மோடி படத்தை வெளியிட கம்யூனிஸ்ட்டுகள் எதிர்ப்பு

புதுடெல்லி: ‘மோடியின் சுயசரிதை திரைப்படத்ைத வெளியிடுவதை தள்ளிவைக்க வேண்டும்’ என்று தேர்தல் ஆணையத்திடம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மனு கொடுத்துள்ளன. பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு, இந்தியில் ‘பிரதமர் நரேந்திர மோடி’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இதில், பாலிவுட் நடிகர் விவேக் ஒபராய் மோடியாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 5ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மக்களவைக்கு முதல் கட்ட தேர்தல் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன் இந்த படத்தை வெளியிடுவது தேர்தல் நன்னடத்தை விதிமுறையை மீறிய செயல் என்பதால், அதை இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் மே 19ம் வரை வெளியிட அனுமதிக்கக் கூடாது’ என்று தேர்தல் ஆணையத்திடம் நேற்று முன்தினம் காங்கிரஸ் மனு கொடுத்தது.

அன்றைய தினமே மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளும் தேர்தல் ஆணையத்திடம் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு கொடுத்தன. இந்நிலையில், இரு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் நேற்று வெளியிடப்பட்ட  அறிக்கையில், ‘மோடியின் சுயசரிதை படத்தை தேர்தல் நேரத்தில்   வெளியிடுவது நடத்தையை மீறிய செயல் என்பதால், அதன் வெளியீட்டை  நிறுத்த ஆணையத்தில் முறையிடபட்டுள்ளது. மேலும், 50% வாக்காளர் ஒப்புகை சீட்டுகளை வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது’ என கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: