×

கார் மோதி மாநகராட்சி லாரி பைப் உடைப்பு நடுரோட்டில் எஸ்ஐ கட்டப்பஞ்சாயத்து

அண்ணாநகர்: சென்னை மாநகராட்சியில் கழிவுநீர் லாரி டிரைவராக இருப்பவர் வேல்முருகன். இவர் நேற்று மாலை 4.30 மணியளவில் அண்ணாநகர் டவர் பார்க் அருகே ஊழியர்களுடன் கழிவுநீர் அடைப்பு அகற்றும் பணியில்  ஈடுபட்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் லாரியில் இருந்து செல்லும் கழிவுநீர் பைப் மீது மோதியது. இதில், கழிவுநீர் பைப் உடைந்து சேதமடைந்தது. உடேன ஓட்டுனர் வேல்முருகன் ஒடி வந்து பைப் உடைந்ததை  பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பிறகு காரை ஓட்டி வந்த நபர்களிடம் ‘நீங்களே வேறு பைப் வாங்கி கொடுத்து விடுங்கள், இலையை என்றால் என் சம்பளத்தில் பிடிவிடுவார்கள் என்று கூறியுள்ளார்.

ஆனால், காரை ஓட்டி வந்தவர், ‘என்னால் வாங்கித்தர முடியாது,’ என்றார். தகவலறிந்து வந்த அண்ணா நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கண்ணன் (56), காரை ஒட்டி வந்த நபர்களிடம் கட்டப்பஞ்சாயத்து செய்து ₹4,000  வாங்கி கொடுத்துவிட்டு, திரும்பி பார்க்காமல் ஓடிவிடு என்று வேல்முருகனை மிரட்டினார். ஆனால் பைபின் மதிப்பு 20 ஆயிரம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், லாரி டிரைவர் வேல்முருகன் எவ்வளவு போராடியும் போலீஸ் எஸ்ஐ அதை காதில் வாங்காததால் மனம் உடைந்த அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.இதன் பிறகு, எஸ்.ஐ. கண்ணன் காரில் வந்த நபர்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு நைசாக அனுப்பி விட்டார். இந்த சம்பவம் அனைத்தையும் அங்கிருந்த பொதுமக்கள் பார்த்து புலம்பியபடியே சென்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Car, lorry pipe, bust, midfront
× RELATED வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை,...