×

கட்சியில் இணைந்த உடனே நடிகை ஜெயப்பிரதாவுக்கு சீட் தந்து வரவேற்ற பாஜ

நடிகையும், அரசியல்வாதியுமான ஜெயப்பிரதா பாஜவில் இணைந்த சில மணி நேரத்திலேயே உ.பி.யின் ராம்பூர் தொகுதியில் போட்டியிட சீட் பெற்றார்.நடிகை ஜெயப்பிரதா கடந்த 1994ம் ஆண்டு சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியில் இணைந்தார். ஆனால், சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி சமாஜ்வாடியில்  இணைந்தார். 2004, 2009ம் ஆண்டு சமாஜ்வாடி சார்பில் உபி.யின் ராம்பூர் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி ெபற்றார். பின்னர் சமாஜ்வாடியில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அமர்சிங்குடன்  இணைந்து புதிய கட்சியை தொடங்கினார். பின் அஜித் சிங்கின் ராஷ்டிரிய லோக் தளத்தில் சேர்ந்தார். தற்போது அங்கிருந்து விலகி பாஜவில் இணைந்துள்ளார்.

கட்சியில் தாவிய சில மணி நேரத்திலேயே ஜெயப்பிரதாவுக்கு ராம்பூர் தொகுதியில் போட்டியிட பாஜ சார்பில் நேற்று சீட் தரப்பட்டது. இவர் அங்கு, சமாஜ்வாடி கட்சி தலைவர் அசாம்கானை எதிர்த்து களமிறங்க உள்ளார்.  ஏற்கனவே மாற்று கட்சியில் இருந்து வருபவர்களுக்கு பாஜ உடனடியாக சீட் தந்து வரவேற்கும் நிகழ்வு, ஜெயப்பிரதா விஷயத்திலும் நடந்து விட்டது.மேனகா, மகனுக்கு சீட்:  உபியில் மத்திய அமைச்சர் மேனகா காந்திக்கு சுல்தான்பூர் தொகுதியிலும், அவரது மகன் வருண் காந்திக்கு பிலிபித் தொகுதியிலும் சீட் தரப்பட்டுள்ளது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayaprada ,party ,actress , Immediately, party, Actress Jayaprada, Welcome, seat
× RELATED பாஜ அழைத்தால் பிரசாரம் செய்வேன்: நடிகை ஜெயப்பிரதா பேட்டி