இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசி வரும் செங்கோட்டையன், நயினார் நாகேந்திரன் மீது நடவடிக்கை: தேர்தல் அதிகாரியிடம் தமிழ்நாடு முஸ்லிம் லீக் புகார்

சென்னை: இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசி வரும் அமைச்சர் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் கூறியுள்ளார்.இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹுவை சந்தித்து ஒரு புகார் மனு அளித்தார். அதில் கூறி  இருப்பதாவது:மக்களவை தேர்தலை அமைதியுடன், நேர்மையுடன் நடத்த வேண்டும் என தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் பிரசாரம் தொடர்பாக பல்வேறு விதிகளையும் தேர்தல் ஆணையம்  வகுத்துள்ளது. ஆனால் இந்த விதிகளை மீறும் வகையில் பலர் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

ஈரோடு மக்களவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம் மேற்கொள்ளும்போது, இஸ்லாமியர்களை தீவிரவாதிகள், பயங்கரவாதிகள்  என கூறியுள்ளார். ஆகையால் அவரை  அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். தேர்தல் விதிகள்படி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதேபோன்று ராமநாதபுரத்தில் பாஜ சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன், ஆண்டாள் விவகாரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது, இந்துக்களுக்கு எதிரானவர்களை கொலை செய்ய வேண்டும், வைரமுத்துவை கொலை  செய்வது தவறு இல்லை என பேசியவர். ராமநாதபுரம் தொகுதி என்பது இந்துக்களும், இஸ்லாமியர்களும் சரிபாதி நிறைந்திருக்க கூடிய தொகுதி. இந்த தொகுதியில் நயினார் நாகேந்திரன் பிரசாரம் மேற்கொண்டால், மத, சாதி  கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே நயினார் நாகேந்திரன் மனுவை தள்ளுபடி செய்து, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>