×

தேர்தலையொட்டி தீவிர சோதனை எதிரொலி சென்னையில் 17.5 கோடி பணம், தங்கம், வைரம் பறிமுதல்: தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் ₹17.5 கோடி மதிப்புள்ள நகை, பணம், வைரம் ஆகியவற்றை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.சென்னை ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே தேர்தல் பறக்கும் படையினர் நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமாக வந்த ஆம்னி வேனை வழிமறித்து பறக்கும் படையினர் சோதனை  செய்தனர். அப்போது, ஓட்டுனர் அருகே செல்போன் மற்றும் ரூபாய் நோட்டு கட்டுகள் 18 இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு வாகனத்தை கொண்டு சென்று சோதனை  நடத்தினர். அப்போது, 2.5 கிலோ தங்க கட்டிகள், தங்க வளையல் ஒன்று, வைர கம்மல் 1 செட், 6 வைர கற்கள், 40 கிராம் கொண்ட 5 ஐம்பொன் சிலைகள், 30 ஐ போன், 7 கேமரா, 3 கேமரா ேரால், விலை உயர்ந்த 4 வாட்ச் என ₹1.5  கோடி மதிப்புள்ள பொருட்கள் இருந்தது. உடனே ஆம்னி வேனை ஓட்டி வந்த டிரைவரை பிடித்து பறக்கும் படையினர் விசாரணை நடத்தினர். அதில், ஏழுகிணறு பகுதியை சேர்ந்த பிரமோத்குமார் (38), ராஜிவ் பட்டேல் (36) என  தெரியவந்தது. இவர்கள் இருவரும் பாரிமுனையில் உள்ள தனியார் கொரியர் நிறுவனத்தில் இருந்து விமான நிலையத்திற்கு செல்வதாக தெரிவித்தனர். மற்றப்படி எங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளனர்.இதையடுத்து ஆம்னி வேனில் கொண்டு வந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம், வைர நகைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் அவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக ஆம்னி வேன்  டிரைவர் உட்பட 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதேபோல், தி.நகர் பகுதியில் நடத்திய வாகன சோதனையில் காரில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த ரூ.9.69 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் ெசய்தனர். இதுதொடர்பாக பணத்தை கொண்டு  வந்த தனியார் நிறுவன ஊழியர்கள் 4 பேரை மாம்பலம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அதேபோல், பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி பாலசுப்பிரமணி தலைமையிலான அலுவலர்கள் ஆலந்தூர் தியேட்டர் அருகே நேற்று மதியம் வாகன சோதனை நடத்தினர். அப்போது வேகமாக  வந்த ஒரு வேனை மடக்கி சோதனை நடத்தினர். வேனில் உரிய ஆவணங்கள் இன்றி ₹1 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 981 பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர்,  பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை பரங்கிமலை இன்ஸ்பெக்டர் வளர்மதியிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.அதேபோல், சோழிங்கநல்லூர் ராஜிவ் காந்தி சாலையில் உள்ள பொன்னியம்மன் கோயில் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரி துரைவேல் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த  வேனை மடக்கி சோதனை நடத்தியபோது வேனில் ₹1.80 கோடி பணம் இருப்பதும், அதற்கு முறையான ஆவணம் இல்லை என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து வேனில் வந்த குணசேகரன் மற்றும் புண்ணியகோடி ஆகிய இருவரை விசாரித்த போது சென்னை சேத்துப்பட்டு பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் இருந்து பணம் எடுத்து வந்து சோழிங்கநல்லூர் உட்பட்ட  பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்தில் செலுத்த கொண்டு வரப்பட்டது என தெரிவித்தனர். ஆனாலும் பணத்திற்கான உரிய ஆவணம் இல்லாததால் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் ெசய்தனர். சென்னை முழுவதும் நேற்று நடந்த அதிரடி சோதனையில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வைர நகைகள் மற்றும் ரூ.3 கோடி பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.சூளைமேடு நெல்சன் மாணிக்கம் சாலையில் ேநற்று முன்தினம் இரவு தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேன் ஒன்றை வழிமறித்து சோதனை செய்த போது, சிறு சிறு  பெட்டிகளில் ரூ.13 கோடி மதிப்புள்ள வைர நகைகள் மற்றும் வைர கற்கள் இருந்தது. உடனே தேர்தல் பறக்கும் படையினர் நகைகளை கொண்டு வந்த வடமாநில நபர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, சென்னை எழும்பூர் பகுதியில் நடந்த வைர நகை கண்காட்சிக்கு டெல்லியில் இருந்து கொண்டு வந்ததாகவும், கண்காட்சி முடிந்து திரும்பவும் சென்னை விமான நிலையம் மூலம் டெல்லிக்கு கொண்டு செல்வதாக கூறி  வைர நகைகளுக்கான ஆவணங்களை பறக்கும் படையினரிடம் கொடுத்தனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : election , 17.5 crore cash, gold ,diamond , Chennai
× RELATED ஊழியர்களை வஞ்சிக்கும் ரயில்வே துறை...