×

இமாச்சலில் பேரனுக்காக மோதும் தத்தா மாண்டியில் 2 ‘ராம்கள்’ போட்டி

இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்தவர் முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராம் (91). இவர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியின்போது மத்திய தொலைத்தொடர்பு துறை அமைச்சராக இருந்தவர். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து பாஜ.வில் ஐக்கியமானார். இந்நிலையில், மக்களவை தேர்தலில் மாண்டி தொகுதியில் போட்டியிடுவதற்கு தனது பேரன் அஷ்ரய் சர்மாவிற்கு பாஜ வாய்ப்பு வழங்கும் என சுக்ராம் எதிர்பார்த்தார்.
ஆனால், மாண்டி தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்பி ராம் ஸ்வரூப்பையே பாஜ இந்த முறையும் வேட்பாளராக களமிறக்கியுள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த சுக்ராம், தனது பேரன் அஷ்ரய் சர்மாவுடன் கடந்த திங்களன்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அஷ்ரய் சர்மாவிற்கு காங்கிரஸ் வாய்ப்பு வழங்கும் பட்சத்தில் மாண்டி தொகுதியின் வெற்றித் தோல்வி என்பது சுக்ராம் - ஜெய்ராம் தாகூருக்கு இடையேயான பலப்பரீட்சையாக  மாறும் வாய்ப்புள்ளது. சுக்ராமின் மகனும், அஷ்ரய் சர்மாவின் தந்தையுமான அனில் சர்மா, தற்போது பாஜ தலைமையிலான முதல்வர் ஜெய்ராம் தாகூரின் அமைச்சரவையில் மின்சார துறை அமைச்சராக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : match ,mundi ,Dandi , Himachal Pradesh, Union Minister Sukram
× RELATED வங்கதேச பெண்களுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி