ஜெகன்மோகன் ரெட்டி முன்னிலையில் நடிகர் மோகன்பாபு ஒய்எஸ்ஆர் காங்கிரசில் இணைந்தார்

ஆந்திர சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில் ஏப்ரல் 11ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு நேற்று ஐதராபாத்தில் உள்ள ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியை சந்தித்து கட்சியில் இணைந்தார்.  மோகன்பாபுவிற்கு கட்சியின் மேல் துண்டு அணிவித்து அவரை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில்  ஜெகன்மோகன் ரெட்டி இணைத்துக்கொண்டார். பின்னர் மோகன்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் சேர்வதற்கு நான் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை.

17 ஆண்டுகளுக்கு முன்பே மாநிலங்களவை எம்பியாக பதவி வகித்தவன். நான் நினைத்திருந்தால் அப்போது முதல் தொடர்ந்து அரசியலில் இருந்திருக்கலாம். ஆனால் அதற்கான தேவை ஏற்படவில்லை. என்.டி.ராமராவ் ஆரம்பித்த கட்சியில்  அவருக்கே உறுப்பினர் பதவியை கூட கிடைக்காமல் ராஜினாமா செய்ய வைத்த துரோகி சந்திரபாபு நாயுடு. இவ்வாறு மோகன்பாபு கூறினார்.பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED பதவியை ராஜினாமா செய்து விட்டு...