×

‘ஓசி’ பயணம் செய்வோரை கட்டுப்படுத்த எம்டிசி பஸ்களில் சிறப்பு டிக்கெட் பரிசோதனை நடத்த திட்டம்

சென்னை: எம்டிசி பஸ்களில் ‘ஓசி’ பயணம் செய்வோரை கட்டுப்படுத்தும் விதமாக, சிறப்பு டிக்ெகட் பரிசோதனை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் (எம்டிசி) சார்பில் தினசரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அலுவலகம், பள்ளி, கல்லூரி என பல்வேறு இடங்களுக்கு தினசரி 30 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதில் பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு பயணம் செய்ேவாரில் ஒரு சிலர் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கின்றனர். இதனால் எம்டிசி நிர்வாகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக அவ்வப்போது பரிசோதகர்கள் மூலம் பஸ்களில் சோதனை நடத்தப்படுகிறது. அப்போது சிக்குவோருக்கு அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் சமீபகாலமாக நிர்வாகத்தை ஏமாற்றி பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறப்பு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி நேற்று கோயம்பேடு, எம்எம்டிஏ, கோயம்பேடு பள்ளி ஆகிய பஸ் ஸ்டாண்டுகளில் சிறப்பு சோதனை நடத்தப்பட்டது.  தொடர்ந்து இதேபோல் ஆய்வு அனைத்து இடங்களிலும் நடத்த அதிகாரிகள் முடிவு ெசய்துள்ளனர்.  இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மாநகர பஸ்களில் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்ேவாரை கட்டுப்படுத்த சிறப்பு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு, எம்எம்டிஏ பகுதியில் சிறப்பு பரிசோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து டிக்ெகட் எடுக்காமல் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகம் இருக்கும் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தொடர்ந்து திடீர் பரிசோதனை நடத்தப்படும். இதில் சிக்குவோர் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : travelers ,OCI , எம்டிசி பஸ்கள், சிறப்பு டிக்கெட் பரிசோதனை
× RELATED காரைக்குடி-திண்டுக்கல் இடையே புதிய...